Tuesday, November 26, 2019

24.11.19 அன்னைத் தமிழை மறக்காதே ! அடையாளத்தை இழக்காதே! - மா.க.பே -மதுரை

24.11.2019. இன்று .மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் 
மாமதுரைக் கவிஞர் பேரவையின் 
தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் நடந்த கவியரங்கம் .
முன்னிலை செயலர் கவிஞர் இரா .இரவி !


படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் 
ரெ .கார்த்திகேயன் & கு.கி.கங்காதரன் 
கை வண்ணம்

குறிப்பு : அன்றைய தினம் கவிஞர் ஆதி நரசிம்மன் அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு மற்றும் வடை ஆகியவை தந்து சிறப்பித்தார். 
அன்று கவிதை பாடிய கவிஞர்களின் கவிதைகளும், 
மின்படத்தொகுப்பும் 









கவிஞர் செயராமன் - கவிதை 














     அன்னைத் தமிழை மறக்காதே ! 
       அடையாளத்தை இழக்காதே!

   கு.கி.கங்காதரன் மதுரை 9865642333

அறிவியலில் பிழை நாட்டை அழிக்கும் 
உற்பத்தியில் பிழை தரத்தைக் கெடுக்கும் 
மருத்துவரின் பிழை உயிரை மாய்க்கும் 
மொழியில் பிழை அடையாளத்தை இழக்கும் 

செயலில் மாற்றம் மகிழ்ச்சியைத் தரலாம் 
வயலில் மாற்றம் வளர்ச்சியைத் தரலாம் 
எண்ணத்தில் மாற்றம் எழுச்சியைத் தரலாம் 
அன்னைத்தமிழில் மாற்றம் தளர்ச்சியைத் தருமே 

விதையைத் தேடி மரம் அலைகிறது   
விண்ணைத்தேடி நிலவு அலைகிறது   
தீயினைத் தேடி தீக்குச்சி அலைகிறது   
தமிழர்களைத் தேடி தமிழ் அலைகிறது . 

தமிழனே தமிழ்பேச மறக்கின்றாயே    
தங்கத்தை தகரமாகப் பார்க்கின்றாயே  
இமயத்தை இளக்காரமாய் நினைக்கிறாயே 
அன்னைத்தமிழை வீதிக்கு இழுக்கிறாயே 

அந்நியமொழி ஆதிக்கத்தில் தமிழும் வீழ்ந்தது  
அழியப்போகும் மொழியில் தமிழும் சேர்ந்தது 
அடையாளம் தெரியாமல் தமிழ் புதையப்போகிறது 
அப்போது தமிழ் இனமே காணாமல் போகப்போகிறது 
               **********************



















 

  


  


  


  






 
   
  

  

  

  
  

  

  


  







  
  










  

  






நன்றி