30.10.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் 4 - கற்பனையும் கவிதையும்
மதுரை, மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 அளவில் நடந்த கவியரங்கம்.
பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலர் கவிஞர் இரா.இரவி முன்னிலை வகித்தார்.
கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு அவர்களின் "பார்வைத் தீண்டல்கள்"நூல் வெளியிடப்பபட்டது.
புரட்சிக்கவிஞர் அறத்தின் தலைவர் பி .வரதராசன் வாழ்த்துரை வழங்கினார். கற்பனையும் கவிதையும் என்ற தலைப்பில் கவிஞர்கள் இரா இரவி, முனைவர் இரா.வரதராசன், கு.கி.கங்காதரன், கல்யாண சுந்தரம், சங்கர நாராயணன், அஞ்சூரியா க.செயராமன், மா.வீரபாகு, பொன் பாண்டி, இராம.பாண்டியன், ச.லிங்கம்ம்மாள், சாந்தி திருநாவுக்கரசு, குறளடியான், புலவர் முருகுபாரதி, பால கிருட்டிணன், சசி முத்து, அனுராதா, பால் பேரின்பநாதன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் சம்பத் கை வண்ணம்.ஏற்பாடு இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன். 30.10.2022