Saturday, December 7, 2024

24.11.2024 கவியரங்கம் - 28 ஏன் வேண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து - இரா .வரதராசன்- ஆழ்வார்களும் அவதாரங்களும் - கவிதை நூல்

  


24.11.2024 கவியரங்கம்

மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.

"ஏன் வேண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து   " என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ்ச்செம்மல் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது.துணைத்தலைவர்   முனைவர் இரா .வரதராஜன் வரவேற்றார் . வீர  ஆதிசிவ தென்னவன்  முன்னிலை வகித்து விருதுகளை வழங்கினார்..துணைச்செயலர் கு .கி  கங்காதரன் முன்னிலை உரையாற்றினார்.

முனைவர் இரா .வரதராசன்  எழுதிய  " ஆழ்வார்களும்  அவதாரங்களும் "எனும் கவிதை நூல் வெளியிட்டனர் .

கவிஞர்கள் முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம் ,  புலவர் மகா . முருகு பாரதி,குறளடியான் ,அழகையா ,  ச. லிங்கம்மாள்,அனுராதா  , முனியாண்டி  , அஞ்சூரியா க .செயராமன் ,பா.பழனி,   வனஜா  ,தனசிங் மனோகரன்   ஆகியோர் கவிதை பாடினார்கள்.


மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர், மறைந்தும் மறையாத கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் நினைவிய விருதை  சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் முனியாண்டி , தனசிங் மனோகரன் இருவரும் விருது  பெற்றனர்.

தலைவர்   பேராசிரியர் சக்திவேல் இதயத்துல்லா ( இளையாங்குடி இருவர் வர இயலாத காரணத்தால் அவர்கள் அனுப்பிய  கவிதையை கு.கி.கங்காதரன்  அவர்கள் வாசித்தார்.
  
பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்

பார்வையாளர்களாக செந்தமிழ்க் கல்லூரி விரிவுரையாளர் அதி வீர பாண்டியன், உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர்,  மன்றத்தின் தலைவர்   பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.  

படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்...



                      























ஏன் வேண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து? 

புதுக்கவிதை 
கங்காதரன் 

தமிழுக்குச் சிகரமான தமிழ்த்தாய் வாழ்த்து 
தந்தது மனோன்மணீயம் சுந்தரனாரின் கெத்து 
மங்காப்புகழ் சேர்க்கும் தமிழர்களின் சொத்து 
மகுடமாய் விளங்கும் தமிழ்மொழியின் வித்து 

அரசு விழாக்களில் மங்கலமாய்த் தொடங்கிடும் 
அற்புதமாய்ப் பாடப்படும் கடவுள் வாழ்த்து 
மோகனத்தில் பாடப்படும்  'நீராரும் கடலுடுத்த'
மேகத்தின் குரலில் ஓங்காரமாய் ஒலித்திடும் 

பாரத கண்டத்தின் அங்கமான தமிழ்நாட்டை 
பழந்தமிழால் வர்ணிக்கும் அழகுச் சந்தங்கள்
அனைத்துலகும் இன்ப எல்லையை உணர்த்தும் 
இளமையானத் தமிழை வியந்து வாழ்த்தும் 

தமிழ்நாடு சிறக்க தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டும் 
தமிழர் ஒற்றுமைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டும் 
தமிழ்மொழி காக்க தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டும் 
திருவாய் இனிக்கத் தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டும் 
************









































                                                                                *******************



No comments:

Post a Comment