Monday, July 29, 2019

28.7.19 மா. க. பே - கவியரங்கம் - அமெரிக்க எருமை கூட அம்மாவென் றழைக்கிறது

மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் 
இடம் : மணியம்மை மழலையர் பள்ளி, மதுரை. 
நாள்: 28.7.19   காலை : 9.30 மணி 
தலைப்பு: 
அமெரிக்க எருமை கூட அம்மாவென் றழைக்கிறது 
தமிழர்தம் பிள்ளைகளோ தாயைமம்மி என்கின்றது 



அன்று கவிஞர்கள் வாசித்த கவிதைகள் சில இதோ...










நான் வாசித்த எனது கவிதை இது 
அமெரிக்க எருமை கூட அம்மாவென் றழைக்கிறது 
தமிழர்தம் பிள்ளைகளோ தாயைமம்மி என்கின்றது 

இரும்பைக் காந்தம் இழுக்கிறது 
ஆங்கிலமோ தமிழனை இழுக்கிறது 
அம்மாயென்றால் தாழ்வாய் நினைக்கிறது 
மம்மியெனக் கூப்பிடுவதே விரும்புகிறது  

வேலைக்காகத்  தமிழை வெறுக்கிறான் 
வணிகத்திற்காகத் தமிழை விற்கிறான் 
விருத்திற்காக தமிழைப் புகழுகிறான் 
வாக்குக்காக தமிழைப் போற்றுகிறான் 

தமிழ் வாழ்கவென்று ஏமாற்றுகிறான்   
தமிழே உயிரென்று நடிக்கிறான் 
தமிழுக்கு மரியாதை தரமறுக்கிறான் 
தாராளமாய் ஆங்கிலம் கலக்கிறான் 

செம்மொழித் தமிழை மறக்கிறான் 
செந்தமிழைக் காக்க மறுக்கிறான்  
ஆங்கிலம் பின்னே ஓடுகிறான் 
ஆடுகளாய் ஒரேதிசையில் சாய்கிறான்

உலகமே தமிழைப் போற்றுகிறது 
உலக மக்களை வழிகாட்டுகிறது 
தமிழனோ தமிழைத் தவிர்க்கிறான்  
தங்கமென ஆங்கிலத்தை ஏற்கிறான் 

நஞ்சு கலந்தபால் உயிரைக் குடிக்கும் 
நாகமான ஆங்கிலம் தமிழைக் கொல்லும் 
விளையும் களைகள் பயிரை அழிக்கும் 
வீச்சான செயலே தமிழைக் காக்கும்   

படைப்பு : கு.கி. கங்காதரன் 
9865642333  

நிகழ்ச்சியின் சில மின்படங்கள் ...






























































 
















*************************







1 comment:

  1. மிகச்சிறப்பு.பாராட்டுக்கள்

    ReplyDelete