மாமதுரைக் கவிஞர் பேரவை- கவியரங்கம்
30.6.19 தொலைகாட்சி நீபேசுவது தமிழா?
மணியம்மை மழலையர் பள்ளி, மதுரை
விழா ஆரம்பிக்கும் முன் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்களின் மறைவுக்கு அனைத்துக் கவிஞர்களும்
மெளன அஞ்சலி செலுத்துனர்
அன்று கவிஞர்கள் வாசித்த சில கவிதைகள்
அன்று நான் வாசித்தக் கவிதை இதோ ..
தொலைக்காட்சி நீ பேசுவது தமிழா?
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
தமிழ்ப் பற்றாலர்களின் ஏக்கம்
தொட்டது அன்று உச்சநிலை
தொலைக்காட்சித் தமிழுக்குத் தேர்வு
தேவை என்று முடிவானது.
ஒன்றாய் நடுவர்குழு கூடியது
அமைதியாய் அரங்கம் மாறியது
எப்படித் தேர்வு இருக்கும்?
எதன் அடிப்படையில் நடக்கும்?
முடிச்சு சற்று நேரத்தில் அவிழ்ந்துவிடும்
முடிவு யாதெனத் தெளிவாய் தெரிந்துவிடும்
தொலைக்காட்சியில் பாடல்கள் ஒலித்தது
தமிழ்ப்பாடலாவென அரங்கம் திகைத்தது
கணினியில் தமிழ்ச்சொற்கள் கணித்தது
கலப்புச்சொற்களின் எண்ணிக்கையும் தந்தது
என்பது விழுக்காடு தமிழென அறிவித்தது
அரங்கமே கைத்தட்டலில் ஆர்ப்பரித்தது
நிகழ்ச்சித் தலைப்புகள் அடுத்து வந்தது
நாற்பது விழுக்காடு மதிப்பெண் பெற்றது
தமிழர்களின் முகங்கள் தொங்கிப் போனது
தலைமயிரிழையில் தமிழ்த் தேர்ச்சி பெற்றது
தமிழ்த்தொடர்களின் உரையாடல் ஓடியது
தந்ததோ கணினி எழுபது விழுக்காடு
தமிழ் உச்சரிப்புகளுக்கு மதிப்பெண் போட்டது
தட்டுத்தடுமாறி நாற்பது விழுக்காடு வாங்கியது
நடுவர்களின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது
நடப்பு மொழிகளில் தமிழ்மொழி
அழிந்துவிடும் அபாயமென எச்சரித்தது
அடுத்த ஆண்டில் இவ்விழுக்காடு கூடுமா?
*******************
கவியரங்கத்தின் மின்படங்கள்
***************
படங்களும் பாக்களும் நன்று.
ReplyDeleteதமிழ் காப்போம்