30.03.2025 கவியரங்கம்
மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.
"மணம் கமழும் தமிழே;மனம் கவரும் தாயே!" மும்மொழியை முக்காலமும் எதிர்ப்போம் "
என இரு தலைப்புகளில் கவியரங்கம் நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி வரவேற்றார். நிறுவனர் சி .வீரபாண்டியத் தி தென்னவன் அவர்களின் மகன் வீர ஆதிசிவம் தென்னவன் , பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம் ,,துணைத்தலைவர் முனைவர் இரா .வரதராஜன் முன்னிலை வகித்தனர் ..
புரட்சி ப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்கள் சிறப்பாக கவிதை பாடிய தென்காசி திருவள்ளுவர் கழகம் புலவர் ஆறுமுகம் அவர்களுக்கும் ,கவிஞர் இரா .கலயாணசுந்தரம் அவர்களுக்கும் பொன்னாடைப் போர்த்தி வாழ்த்துரை வழங்கினார் .
நூல் ஆசிரியர் கவிஞர் கு. பேரின்பநாதன் அவர்கள் படைத்த 'பல்சுவைப் பாக்கள்' என்ற கவிதை நூலை , பி .வரதராசன் அவர்களுக்கும் , இரா .இரவிக்கும் வழங்கினார்.
கவிஞர் குறளடியான் எழுதிய யுகாதி நூல் வெளியிடப்பட்டது .
கவிஞர் பேராசிரியர் சக்திவேல் அவர்கள் தலைமையில் ,கவிஞர்கள் இரா .இரவி , முனைவர் இரா.வரதராசன், இரா.கல்யாணசுந்தரம் , புலவர் மகா.முருகு பாரதி, குறளடியான், ச. லிங்கம்மாள், முனியாண்டி , அஞ்சூரியா க.செயராமன் , முனைவர் பா .ஸ்ரீவித்யாபாரதி, பொன்.பாண்டி, பாலகிருட்டிணன் ,புலவர் ஆறுமுகம், இதயத்துல்லா, பால் பேரின்பநாதன், சாந்தி , வீரபாகு , ம .சு .பாஅரசி , ஒ.தேவதர்சினி, ஹர்ஷா, சு.சந்தோஷ் , அபிராமி , இந்தி ஆசிரியர் ம . வேல்பாண்டியன், கு.ப.நாகராசன்ஆகியோர் கவிதை பாடினார்கள். துணைச்செயலர் கு .கி கங்காதரன் நன்றி கூறினார் .
த.மு .எ .க .ச .பொறுப்பாளர் சு .பாலா சுப்பிரமணியன் ,வீட்டில் நூலகம் வைத்திருக்கும் மண்டல கணக்கு அலுவலர் பாரதி ஆகியோர் உள்பட பலர் பார்வையாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.
படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் அவர்களின் கை வண்ணம்...
மணம் கமழும் தமிழே! மனம் கவரும் தாயே !
- கவிஞர் இரா. இரவி
***
உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ்
உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்
தேவநேயப் பாவாணர் அன்றே உரைத்தார்
தேவமொழிக்கு எல்லாம் மூத்தமொழி தமிழ்
தரணியில் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்
தரணி எங்கும் இன்றும் ஒலிக்கும் மொழி தமிழ்
எழுத்தறிவோடு வாழ்ந்தவன் தமிழன் கீழடி காட்டியது
எழுத்தை கல்வெட்டிலும் ஒலைச்சுவடியிலும் பதித்தவன்
அமெரிக்காவின் மொழி ஆய்வாளர்கள் அறிவித்தனர்
அகிலத்தின் முதல்மொழி செம்மொழி தமிழ்மொழி
என்னவளம் இல்லை நம் ஒப்பற்ற தமிழ்மொழியில்
ஏன் கையை ஏந்தவேண்டும் பிற மொழியில்
தமிழை தமிழாகப் பேசவும் எழுதவும் வேண்டும்
தமிழில் கலப்படம் செய்வது தமிழுக்குக் கேடு
நாசா விண்வெளிக்கு அனுப்பிய மொழியில் தமிழ்
நானிலம் போற்றிடும் ஒப்பற்ற மொழி நம் தமிழ்
அறிவியிலில் சாதித்த அனைவரும் தமிழ் பயின்றவர்கள்
அறிவியலில் சிந்திக்க உதவிய மொழி தமிழ்மொழி
தமிழன் இல்லாத நாடே இல்லை தரணியில்
தமிழ் ஒலிக்காத நாடே இல்லை தரணியில்
மணம் கமழும் தமிழே! மனம் கவரும் தாயே!
முத்தமிழின் முத்திரையே ! கிழிப்போம் போலி முகத்திரையை!
மணங் கமழும் தமிழே! மனங் கவரும் தாயே !
மணங் கமழும் தமிழே!
மனங் கவரும் தாயே !
(2)
தாய்மண் தந்த தனி வாசம்
தாய்ப் பால் தந்த தமிழ் வாசம்
(4)
திணை நான்கால் நிலம் வளர்ந்தது ! -
சங்கம் மூன்றால் தமிழ் வளர்ந்தது !
(6)
நிலத்தின் வளமும் நீரின் குணமும் -தமிழ்க்
குலத்து வேரோ !-
-தழைத்தக் குடிக்குப் பேரோ!
இளமை மாறா செழுமைச் சீராய்
வளமை பெருக *வாழ் தமிழே!
(10)
கல் தோன்றா மண்தோன்றாக்
காலத்து முன் தோன்றிய குடி
( தமிழ்க்குடி)
(12)
ஓசை யொலி சொல் தோன்றா முன் முந்திய செய்கை மொழி
முதற்தமிழே !
-எழுத்துச் சொல்லில் இனம் காட்டும்
இயற் தமிழே!
பொருளில் வளம் கூட்டும்
வளர் தமிழே!
யாப்பினில் வகை காட்டும்
இசைத் தமிழே!
பாப் புனைவில் அணி கூட்டும்
பைந்தமிழே !
(18)
மலரில் மணம் வந்தது யாராலே ?
மண்ணில் மணம் சேர்த்த நீராலே !
(20)
நிலத்தோடு உறவு நீரால் வந்தது !
வளத்தோடு வாழ்வு வளர்ந்து வந்தது !
இனத்தோடு உறவு பேசி வளர்ந்தது
குணத்தோடு உறவுக் குடியால் வாழ்கிறது !
(24)
தாய் வழிச் சமூகம்
தனி வழிச் சமூகம் !
வாய் வழி
தமிழே !
வரு மொழி
தமிழே!*
தாய் மொழி தமிழே !
தரு மொழி
தமிழே !
சேய் மொழி
தமிழே !
செம்மொழி
தமிழே !
(28)
வாழ்க நற்றமிழ் !
வாழ்க நானிலம் !
✍️
கவிதையாக்கம்
சித்தாந்த ரத்தினம்
எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்
புலனம் : 9611226392
மின்னஞ்சல்: moorthy.svr753@gmail.com
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
"மணம் கமழும் தமிழே;
மனம் கவரும் தாயே!"
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
தமிழாய்த் தரணியில் பிறந்தாய்
தமிழர்களின் மனதில் நிறைந்தாய்
எண்ணும் எழுத்தும் அணிந்தாய்
எதிலும் முதலாவதாய்ப் பதித்தாய்
வள்ளுவனையும் கம்பனையும் தந்தாய்
வரலாற்றில் முகவரியாய் நிலைத்தாய்
உறவுகளைப் பாசத்தால் அணைத்தாய்
உலகுக்கு வழிகாட்டியாய்த் திகழ்ந்தாய்
முச்சங்கத்தில் முத்தமிழை வளர்த்தாய்
முற்போக்கில் அருந்தமிழைக் காத்தாய்
பாரதியின் வாக்கினிலை மலர்ந்தாய்
பாக்களினால் மலர்சூடி மகிழ்ந்தாய்
இலக்கியம் தத்துவத்தில் செழித்தாய்
இலக்கண இறையியலில் மிளிர்ந்தாய்
கீழடியில் சிவகளையில் அகழ்ந்தாய்
கிடைத்ததை வியக்கச் செய்தாய்
உலக நாடுகளுக்குப் பயணித்தாய்
அங்கே தமிழையும் பரிசளித்தாய்
காலத்திற்கேற்ப உனை புதுப்பித்தாய்
கோயில் கோபுரமாய் காட்சியளித்தாய்
###########################
@@@@@@@@@@@@@@@@@@@