Monday, February 25, 2019

24.2.19 தாய்மொழிப் பற்றுகொள் தமிழா! மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம்

     24.2.19 தாய்மொழிப் பற்றுகொள் தமிழா!
மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் 



தாய்மொழிப்பற்று கொள்தமிழா!
கவிதைக்கலைமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன்

மலைத்தோட்டம்உருவாகஉழைத்தபெற்றோர்
மனத்தோட்டத்தமிழ்மொழியைத்தேடிக்கற்றோர்
கலைஞானச்சுடரானதமிழைஏற்றார்
கசடறவேகுழந்தைகளும்கற்கத்தந்தார்;
நிலையாகத்தமிழ்ப்பள்ளிக்கூடம்வைத்தார்
நிறைஆட்சிமொழியாகநாட்டிஉள்ளார்
தொலைதூரம்சென்றாலும்தமிழ்மேல்பற்றைத்
தொலைக்கவில்லைஅவர்தமிழைஇழக்கவில்லை

அலையலையாய்ச்சோதனைகள்வந்தபோழ்தும்
அணையாதவிளக்காகத்தமிழைக்காக்க
தலைமுறைகள்அறிந்திடவேநூற்கள்சேர்க்கத்
தமிழெங்கள்உயிரென்றேபற்றுக்கொள்வீர்
நிலையானபுதியவிதிபடைத்துவெல்வீர்
நற்றமிழின்எழுத்தைமட்டும்ஏற்றுச்செல்வீர்
உலையாமல்தமிழ்மொழியும்உயர்ந்துசெல்லும்
உலகமொழிதமிழென்றேகாலம்சொல்லும்

விலைபோகாமனதுடனேதமிழைஏந்தி
வீரமுடன்வாழுகிறதமிழர்ஆகி
கலைகளுடன்இலக்கியமாய்மொழியைமாற்றிக்
கணினிமொழிவரிசையிலேதமிழைஎற்றி
வலைதளத்தில்பயன்படுத்தும்மொழியாய்ஆக்கி
வரலாறுபடைக்கின்றபற்றுக்கொள்வீர்
மலைக்காமல்தாய்மொழிமேல்பற்றுக்கொண்டால்

மதிப்பாரேமாற்றாரும்உன்னைக்கண்டே!!

                  *********************

****************

******************

****************



*****************

தாய்மொழிமேல்பற்றுகொள்தமிழா!
சந்தக்கவிஞர்சக்கந்தி நா.வேலுச்சாமித்துரை

தமிழாநீதாய்மொழிமேல்பற்றுக்கொள்ளய்யா
                தயங்காமல்பிறமொழியும்கற்றுக்கொள்ளய்யா
உமிநீக்கிதானியத்தைஒதுக்கிமெல்லய்யா
                உயர்தமிழில்சேர்கிரந்தஎழுத்தைத்தள்ளய்யா
நமதுடையதமிழ்தனையேஅழிக்கப்பார்க்கிறார்
                நாம்படிக்கப்பிறமொழியைஎடுத்துச்சேர்க்கிறார்
உமதுடையஅறிவினைத்தான்இழந்துவிடாதே
                உன்மொழியில்அயல்மொழியைக்கலந்துவிடாதே

மஞ்சளுடன்கரித்துண்டைக்கலந்துவைத்தாலே
                மணம்மாறும்நிறம்மாறும்மதிப்பும்மாறுமே
மலர்த்தேனில்நஞ்சுதன்னைக்கலந்துவைத்தாலே
                மனிதரதைச்சுவைபார்த்தால்உயிரும்போகுமே
மஞ்சத்திலேஉறவாடும்மனைவிக்கீடாக
                மற்றொருத்திஇடைபுகுந்தேஉரிமைகேட்டாலே
மகிழ்ச்சியோடுமானமரியாதைபோகுமே
                மற்றவர்கள்உனையிகழும்நிலமையாகுமே

வஞ்சமிலாத்தாயைவிட்டுஎங்கிருந்தோதான்
                வந்தவளைத்தாயென்றுபோற்றினாலேவுன்
வாழ்க்கையதுசெழித்திடுமோ?பெற்றெடுத்தவுன்
                வாரிசுகள்வளம்பெறுமோ?பாழாய்ப்போகுமே
நெஞ்சமகிழ்தமிழ்மொழியைவளர்ப்பதற்கேநீ
                நினைக்காமல்பணம்பொருளைச்செலவுசெய்தேதான்
நித்தமுமேஅயல்மொழியைவளர்த்தேயுந்தனின்
                நிலைதாழ்த்திக்கொண்டாயேநியாயமோசொல்வாய்

தொழிற்சாலைகடைகளுக்குமாளிகைக்கெல்லாம்
                தூயதமிழ்ப்பெயரிடுவாய்பெற்றெடுத்தவுன்
மழலையர்க்குச்செந்தமிழில்பெயரைச்சூட்டியே
                மகிழ்ந்திருப்பாய்பெற்றோரைசொந்தபந்தினை
வளமைமிகுதமிழுறவால்அழைப்பாய்கண்டதும்
                வருகவென்றுகரங்குவித்தேவணக்கமென்பாயே
அலைபேசிதொலைபேசிஎண்கள்தம்மையே
                அயல்மொழியில்கூறாமல்தமிழில்சொல்வாயே;

சந்தக்கவிஞர்சக்கந்தி நா.வேலுச்சாமித்துரை,  
மாமதுரைக்கவிஞர்பேரவை
கைப்பேசி;:9751337124,6382321378

வாழியசெந்தமிழ்!வாழ்க நற்தமிழர்!!
வாழியபாரதமணிந்திருநாடு
சேய்கிந்த்!!!
             ***************************
தாய்மொழிப்பற்றுகொள்தமிழா
கவிஞர் பேராசிரியர்.மு.க.பரமசிவம் ;பேரையூர்

ஆதியிலேநம்முன்னோர்சொல்லாலாகி
ஆண்டுபலகடந்தாலும்இளமைமாறா
     ஜோதியாகஇருக்கின்றசொக்கத்தங்கம்
           சொன்னாலேவாய்இனிக்கும்மொழியாய்எங்கும்
     வீதிவலம்வருகின்றதமிழாம்தாயே
           வெல்லமாகஇனிக்கின்றஅமுதின்சேயே
     நாதியாய்நம்மரபனுவில்நிற்கும்ஊற்றே
           நினைந்தேபார்தமிழினமேஉன்னைஏற்றே

உன்தாயைநீமறந்துவாழ்தல்போன்றே
உன்மொழியைநீமறந்துசெல்தல்நன்றா
     தன்மொழியைமறந்தவர்கள்வென்றதில்லை
           தமிழ்மறந்துஅலைவதுதான்உந்தன்பற்றா
     முன்னிற்கும்இந்தநிலைமறந்துவிட்டே
           மொழிப்பற்றின்நினைவின்றிநீயேகெட்டே
     பின்னடைவுகாணுவதேஉந்தன்குற்றம்
           பிழையாகத்திரிவதுதான்மட்டம்மட்டம்.

தாய்மொழியின்பற்றாளன்உம்மைமைந்தன்
தகுதியிலேசிறந்திருக்கும்கொள்கைவேந்தன்
     ஆய்ந்தறிந்தபன்னாட்டோர்அறிக்கைபாரு
           அதன்பின்னேஉன்நிலையைதேர்ந்துகூறு
     வாய்கிழியத்தமிழனென்றுசொல்தல்போதும்
           வாழ்தமிழைவளர்த்திடவேபற்றுக்கொள்க.
     சாய்த்திடாதேதாய்மொழியைவெட்கம்கெட்டே
           சரித்திரமேஇகழும்மடாதுக்கம்கேட்டே.

 *******************


       தாய்மொழிப் பற்றுகொள் தமிழா
       கவிஞர் கு.கி.கங்காதரன்மதுரை  

மிழ்நாடேஒரு விளக்காம்
தமிழர்களேஅதில்எண்ணெயாம்
தனித்தமிழே அதில் திரியாம்
தீபத்தீயை ஏற்றுதாலே பற்றாம்.

உலகத் தாய்மொழி தினமாம்
உனெசுகோஅறிவித்தச்சடங்காம் .
உலகத்தாய்மொழிகள் காப்பதற்காம்
உண்மை நிலையோ கவலைக்கிடமாம்.

தாய்மொழிகளில்அழிந்ததுபலவாம்
தங்கியமொழிகளோஅதில் சிலவாம்
ஐநாவின்அழியும்மொழிகள்அறிவிப்பாம்
அன்னைத்தமிழும்அதில் அடக்கமாம்.

ஒருபுறம் மொழிகாக்கும் ஆர்ப்பாட்டம்
மறுபுறம்அழியும்மொழிகளின் போராட்டம்
கணினியால் மொழிகளின்பாடு திண்டாட்டம்
காலம் தருமோ மொழிகளுக்குக் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழிப் பற்றாளர்கள் மாநாடு
உடனே தமிழ்நாட்டில் நடத்திட வேண்டும்
அவரவர் தாய்மொழி நிலையினை உரைத்திடனும்
ஆதிக்கமொழிகளின் தாக்கத்தை இயம்பிடனும்

துரத்திவரும்கணினிஅசுரனோ அரசனோ
தாய்மொழிகளுக்குஎமனோ காப்பானோ
எளியவழிக்கணினியறிவு புகட்டிடனும்
உலகத் தாய்மொழி பற்றைவளர்த்திடனும்.
             ***************
தமிழ்மொழிப்பற்றுகொள்தமிழா!
கவிதாயினி பா. இரம்சான் மதுரை.

அருளைஅள்ளித்தரும்இறையே!
அன்பைஅழகாய்தரும்அன்னையே!
பண்பைப்புகட்டும்தந்தைகல்வியே!
தமிழனுக்குத்தாய்மொழிதமிழே!

தமிழ்நாட்டில்தொன்மைநகரம்மதுரை!
தென்னவனின்தலைமையிடம்மதுரை! – இது
இரண்டாயிரத்து ஐந்நூறுஆண்டுகள்பழமை!
சங்கம்அமைத்துவளர்த்ததுதமிழை!

பிறந்தவரிடம்தவறாதிருப்பதுமொழிப்பற்று!
இராதவரிடம்இராதிருப்பதுதேசப்பற்று!
சற்றேசிந்தித்துப்பார்தங்கத்தமிழா!
தமிழ்மொழிப்பற்றுகொள்தமிழா!

வங்கமொழியில்வங்காளிக்குப்பற்றுண்டு!
மராட்டியமொழியில்மராட்டியனுக்குப்பற்றுண்டு!
ஆந்திரமொழியில்ஆந்திரனுக்குப்பற்றுண்டு!
தமிழ்மொழியில்தமிழனுக்குஏன்பற்றில்லை…?

பிறமொழியைக்கற்பதுகுற்றமில்லை!
தாய்மொழியைமறப்பதுகுற்றமே!
பன்மொழியைக்கற்றுக்கொள்பிழையற!
தமிழ்மொழிப்பற்றுகொள்தெளிவுற!

புகுத்தப்படுகிறதுநமதுநாட்டில்வேற்றுமொழி!
ஆக்கிரமிக்கும்அயல்மொழியைஅறவேயொழி!
உண்மையில்உன்தாய்திருமொழிதமிழா?
தாய்மொழிப்பற்றுகொள்தமிழா…!!!

*************** 
தமிழ்மொழிப்பற்றுகொள்தமிழா!
கவிஞர் பா. பொன்பாண்டி மதுரை

தைரியமாய்முழங்கிடவேவருக
தமிழனுக்குத்தமிழ்உணர்வுதருக
தரணியெங்கும்மலர்க
தமிழனுக்குவழிகாட்டிமகிழ்க!

தடம்பதிக்க
தமிழில்வலிமைகூட்டுக
அடம்பிடிக்கும்
அடுத்தமொழியைஒட்டுக!

தடம்மாறும்
தமிழனைதட்டிஎழுப்புக
தகுந்தபடிஅறிவுரை
தமிழனுக்குவழங்குக!

அமிழ்தமாய்முப்பால்காக்க
அருமைபேசிபழக
இருக்கின்றதமிழ்சொல்காட்டு
இதயத்தில்நம்அறிவைஏற்று!

ஆங்கிலமொழிகலப்பாலே
அடிமாடாய்போகின்றாய்
தீங்குதிணைஒழிப்பாலேநல்ல
தீர்வினைகொடுத்துஅருள்வாய்!

மைதீட்டும்எழுத்துக்குஇங்கே
மதிமயங்கும்கூட்டம்
கைகட்டிநிற்கிறதம்மாஇங்கே
காரணம்அறியாமல்முழிக்கிறதம்மா!

மல்லைநிலத்தில்
முள்செடியா
முத்தமிழில்உள்ள
பிறஎழுத்துகள்!

மங்காததமிழ்மொழியைகாக்க
மாண்புமிகுவழியெனசேர்க்க
தங்கமானதமிழ்மொழிப்பற்று
தரணியெல்லாம்தமிழ்க்கொடியைஏற்று!
 ***************

தாய்மொழிப்பற்றுக்கொள்தமிழா!......
கவிநிலா.இர.செயப்பிரியங்கா மதுரை


பார்புகழும்நம்மொழிஅதன்அருமைஅறியாபாரதத்தோர்நாம்
அதனால்தான்ஆட்சிமொழிஅரசுமொழிபிறநாட்டில்நம்மொழி!

வாழ்வியல்மொழிவாழவழிநடத்தும்வளமிகுமொழியை                                          ----தலைநிமிர்ந்து           
தரணியில்எம்மொழிஎனபீடுகொள்வோம்!

முதுமையில்வீழ்ந்துஅமிழ்ந்துபோனலும்முத்தாகமிளிரச்
                -----செய்யும்இனியமொழி.
கம்பன்என்றொருகவிஞனும்கர்ஜித்தபாரதிஎன்னும்புலவனும்.
கருத்துஅமிழ்ந்துகவிதைதந்தபாரதிதாசனும்
கண்ணதாசன்என்னும்கவியரசனும்
எப்போதும்மகிழ்ந்துகொண்டியமொழி!

இசைக்குஏற்றார்போல்இசைந்துசெல்லும.;..
பதிந்துவிடும்அர்த்தங்கள்.

கன்னித்தமிழாம்கனியினசுவையாம்
காலத்தால்வந்திடும்இயலிசைமொழியாம்...

ஆவுக்குதாய்மொழிதமிழ்!ஆறறிவுமனிதாஉனக்கு
-----எதற்குகிரந்தம்...
அயல்நாட்டினரும்அன்னைத்தமிழ்அறியஆவல்
----கொள்கின்றனர்...

தமிழா!உன்மொழிமறந்துபிறமொழிநஞ்சைக்கலக்கின்றாய்
கல்தோன்றிமண்தோன்றாக்காலத்தேமுன்தோன்றியமொழிமட்டுமல்ல
கற்காலம்தொடங்கிகணினிகாலம்வரைநிலைத்திருக்கும்மொழிநம்தமிழ்.!
*********************
தாய்மொழிப் பற்றுக்கொள் தமிழா
கவிஞர் க. கார்மேகம்

பொங்கலின்  இனியபொருளொன் றுண்டுஅதுவே
திங்களோடுதோன்றியதீந்தமிழ் மொழியது
இங்குளதமிழரைஈன்றதாயது
தண்டமிழ்த் தாயவள் ஒண்டவந் தோர்களால்
மண்டுதன் வளங்கள் மறையாமல் காக்க
தாய்மொழிப் பற்றுக்கொள் தமிழா! நீயும்

பரமசிவன் பாட்டெனினும் பாடும்பொருளில் குற்றமெனில்
நெற்றிக்கண் திறந்துநெருப்பில் வதைத் தாறும்
குற்றம் குற்றமேஎனக் கூசாமல் வாதிட்ட
நக்கீரதேவன் தமிழ் மொழிப் பிற்றேபோல்
தாய்மொழிப் பற்றுக் கொள் தமிழாநீயும்

ஒருசொட்டுக் குருதிஉள்ளவரையிலும்
உயிர்தந்துகாப்பர் உயர் தமிழ்-என்னும்
தமிழுணர் வில்லாதகும்பகர்ணத்தமிழரைத்
தமிழாஎழுவெணத் தட்டிஎழுப்பும்
பாரதியாரின் நவசாமகீதங்கள்
பாரதிதாசனின் புதியகீதைகள்
அறிவு  இருள்நீக்கும் அமுதகலசமாம்


தமிழாதெருக்களில்  தமிழருக்கான
தமிழர்  கடைப்பெயர் தமிழில் வேண்டும்
தமிழகஅரங்கில் தமிழருக்கு இசைக்கும்
தமிழர் பாட்டில் தமிழிசைவேண்டும்
தமிழருக் காகத் தமிழன் கட்டிய
தமிழ்க் கோவில்களில்  தமிழ்மொழிவேண்டுமெனும்
தாய்மொழிப் பற்றுக் கொள் தமிழா
 ***************

தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா !
கவிதாயினி ப. பிரியதர்சினி, மதுரை

ழகுநடை கொண்ட அன்னைத்தமிழ் - அஃது 
கழ்ந்து பார்க்க ஆசை பொங்கும் தமிழ் 
ண்டுகள் கடந்தே நிற்கும் பழந்தமிழ் - இஃது 
ளும் மொழிகளில் அதிபதியான பைந்தமிழ்   

ருகாதிற்கும் தேன்பாய்ச்சும்  இன்பத்தமிழ் - இது 
வ்வுலக ஞானம் தரும் தெய்வீகத் தமிழ் 
டில்லா பெருமையுடன் நிற்கும் தனித்தமிழ் - மற்றும் 
ன்ற பன்மொழிகளில் இதுவே தாய்மைத்தமிழ்  

லகமொழிகளுள் தனித்தன்மையான தமிழ் - இந்த 
ண்மைகளை உணர்த்தும் உன்னதத்தமிழ்
ரெங்கும் மணம் பரப்பும் அமுதானத்தமிழ் - இதோடு 
ற்றுப் பெருக்காய் ஓடிவரும் வற்றாதத்தமிழ்  

ழுத்துகளில் ஏற்றம் கண்டே எழுந்த தமிழ் - பிறமொழி
திர்ப்புகளைக் கடந்து நிற்கும் முத்தானத்தமிழ்  
ராளமான நாடுகள் நாடும் நறுந்தமிழ் - மனதை 
ர்போல ஆழமாய் உழும் அருந்தமிழ்

ங்கரன் தம்பியாய் அவதரித்த தமிழ் - அவனருளாலே
ம்புலன்களிலும் பொதிந்திருக்கும் உணர்வுத்தமிழ்.
ப்பற்றச் சிந்தனைகளை வளர்க்கும் தமிழ் - அறிவுக்கு 
ளிவிளக்காய் விளங்கும் ஓம்காரத்தமிழ்.

லைச்சுவடிகளில் கண்டெடுத்த ஆன்மீகத்தமிழ் - அதை
துவாருக்கு மறைஞானம் வழங்கும் தமிழ்
ஒளவை தந்த அளப்பரிய அறிவு தமிழ் - அதுவே
ஒளடதமாய் தன்மானம் காக்கும் தமிழாம்!
************************
தாய்மொழிப்பற்றுக்கொள்தமிழா!
கவிஞர் சித்தார்த்பாண்டியன் மதுரை

முப்பத்திருபல்முனைகளின்நடுவே
தப்பித்தொருநாதமிழ்படித்திடுங்கால்
ஒப்பரும்புகழும்ஓங்கிடும்வாழ்வும்
இப்பெரும்நிலத்தில்இசைபடுமாமே

சீரைத்தேடிச்சிறந்திடவேண்டின்
ஏரைத்தேடிஓடியகைகள்
பாரைத்தனதுபண்பால்வெல்ல
வீரத்தமிழைவிதைத்திடல்வேண்டும்

உள்ளத்தின்பால்உணர்வுகளொன்றி
வெள்ளத்திரைபோல்விசைபடப்பொங்கி
தெள்ளத்தெளிவாய்தென்திருத்தமிழை
அள்ளிப்பருகிஅறைந்திடல்வேண்டும்

பிணத்தையழிக்கப்பெருந்தழழிடுவார்
தனத்தையழிக்கத்தப்பினுக்கழைப்பார்
இனத்தையழித்துஒழித்திடவேண்டின்
மனத்தில்தாய்மொழிமாண்பினையழிப்பார்

உண்மையிதனைஉன்மனத்திருத்தி
பன்மொழிக்கலப்பைப்பாடையிலிருத்தி
தண்டமிழ்த்தாயின்தனித்துவம்காக்க
இன்முகம்காட்டிஎழுகநீதமிழா

சேற்றில்வீசிச்சிதைத்திடும்போதும்
நாற்றில்முளரிநாற்றாய்எழுமோர்
ஊற்றுத்தமிழின்உன்னதம்காக்க
போற்றித்தாய்மொழிப்பற்றுகொள்தமிழா
********************

தாய்மொழிப்பற்றுக்கொள்தமிழா
கவிஞர்.பசுமலை.த.சசிக்குமார்
                 (எண்சீர்விருத்தம்)

பேச்சினிலேஎழுத்தினிலேதமிழ்தான்என்பார்
பிறமொழியில்பேசவிட்டுபெருமைகொள்வார்
மூச்சினிலேஎங்கள்மொழிகலந்ததென்பார்
முதல்மொழியாய்பிறமொழியைகற்கச்செய்வார்
ஆட்சிமொழிஆகவேண்டும்என்றேசொல்லி
அடுத்தமொழிகலப்பினையேஏற்றுக்கொள்வார்
காட்சிமொழிஆக்கசிலகயவர்இங்கு
கலங்கத்தைவிளைவித்தார்வடவர்தாமே

மற்றமொழிகற்பதிலேமதிப்புஎன்பார்
மதிப்புமிகுதன்மொழியைஒதுக்கிவைப்பார்
கற்றமொழிபெற்றவழிதமிழேஇங்கு
கலப்படத்தைநாடாதேவீணாய்போவாய்
உற்றமொழிஉலகாளும்தெரிந்துகொள்க
உதவிடேனும்ஓரமாகஒதுங்கிநிற்க
பெற்றமொழிவிட்டுவி;ட்டுநீயும்போனால்
பெருமைதனைஇழந்திடுவாய்இன்றேமண்ணில்

பெற்றமொழிபெற்றவளைப்போலேஇங்கும்
பிறந்தபுகழ்விட்டுவிட்டுபோவதேனோ?
உற்றமொழிகற்றிடல்தான்இல்லைஎன்றால்
உன்மொழியைகாத்திடுவார்வேறுயாரோ?
கற்றமொழிதாய்மொழியில்நீயும்கற்றால்
கவிதைகூடகாலடியில்மண்டிஇடும்
நற்றமிழாஇதைமறந்துவேறுகற்றால்
நன்றியென்றஒன்றுனக்குஇல்லைஇங்கு.
                              ************

தாய்மொழிப்பற்றுக்கொள்தமிழா!
கவிஞர்.மதுரை.சு.வைரன் மதுரை

தாய்மொழிபற்றுக்கொள்தமிழா-இனி
தாய்க்குஇணையாய்தமிழைஏற்றுக்கொள்
தமிழைமுறையாய்கற்றுக்கொள்இதை
தம்பிள்ளைகளையும்பின்பற்றச்சொல்

தமிழனேதமிழனாய்யோசிஅதற்கு
தமிழைஉயிராய்நேசி
தமிழிலேமகிழ்வோம்பேசிஅதற்கு
தமிழன்னையும்தருவாள்ஆசி

தமிழ்இன்றும்தாழவில்லை-இதை
தமிழன்தான்உணரவில்லை
தமிழன்தரம்தெரியவில்லை-இது
தமிழனுக்குஏன்புரியவில்லை

தமிழ்கடல்கடந்தும்பேசப்படுகிறது
தமிழ்நாட்டில்தான்ஏசப்படுகிறது
தமிழுக்குஎப்படிசரிவுவந்தது-இது
தமிழனுக்குஎப்படிபுரியாமல்போனது

தமிழுக்குசரிவுநேரக்கூடாது-இனி
தமிழின்உணர்வும்குறையக்கூடாது
தமிழன்தமிழனாய்மாறட்டும்-இனி
தமிழுக்கானதலைகுனிவுமறையட்டும்

தமிழ்மொழிபற்றுக்கொள்வோம்-இனி
தமிழைமேன்மைபடுத்திச்செல்வோம்
தமிழனேதமிழில்பேசச்சொல்வோம்-இனி
தமிழ்மொழியைபாதுகாத்துக்கொள்வோம்.
                ******************
தாய்மொழிப் பற்றுகொள் தமிழா!
கவிதாயினி ந. செயக்குமாரி, மதுரை

தாய் வேறுதமிழ் வேறா
உடல் வேறுஉயிர் வேறா
உடம்பில் உயிராய் உயிரின் உடம்பாய்
தமிழர் வாழ்வின் மூச்சுக் காற்றாய்
என்னும் எழுத்தும் இரண்டுகண்கள்
அகமும் புறமும் வாழ்வியல் நெறிகள் 
வாழ்ந்துகாட்டியஐம்பெருங் காவியம்
இரண்டடிமுப்பால் உலகப் பொதுமறை
அறம் வழி வாழ்ந்திடகீழ்க்கணக்குநூல்கள்
புராண இதிகாசஅற்புதக் காவியங்கள்
புதுமைபுரட்சிகவிதைமலர்கள்
புதினம் கதைகள்;புதுக்கவிதைமணிகள்
புவியில் கடலாய் கதிராய் ஒளியாய்
நிலைத்துவாழும் என்னுயிர் தமிழே!    தாயே
காய்கனிதந்திடும் பெருமரவேராய்
நதிபோல் ஓடிடும் நரம்பில் உதிரமாய்
உணர்வால் கலந்தஉன்னதத் தமிழே! உயர்வே
பற்றென்றுவைத்தால் விட்டுவிலகிடும்
அதற்கும் மேலேமேலேமேலே
உணர்வில் தொடங்கிஉணர்வில் வாழும்
உயர் தனிச் செம்மொழியே! உன்னதப் பொருளே !
புத்தம் புது காலையாய் புதுநூல்கள் மலரவே
எப்படிக்கும்  முதற்படியாய் தமிழ்படித்துவாழ்ந்தாலே
வழிவழித் தோன்றலாய் தமிழ் கல்விகற்றாலே
வையகம் தழைக்கும் வான்தமிழ் வாழும்
எங்கும் தமிழாய் எதிலும் தமிழாய்
பற்றுகொள் தமிழா! தாய்மொழிப் பற்றுகொள்
வையகம் தழைக்கும் வான்தமிழ் வாழும்         
வாழ்கதமிழ்! வளர்கதமிழ்பற்று.
                      *************
தாய்மொழிப் பற்றுகொள் தமிழா!

அகில மொழிகளைக் கற்றுக்கொள் 
தமிழ் மொழிமீது பற்றுக்கொள் 
தாய்த் தமிழை நீமறந்தால் 
தமிழன் என்றநிலையை நீயிழப்பாய் 
தாய் மொழியைக் கற்றிடுவோம் 
தரணியெங்கும் தன்நிறைவைப் பெற்றிடுவோம் 
முக்கனியின் சுவையாக தமிழிருக்க 
ஏன்பாரெங்கும் தேடுகிறாய் அயல்மொழியை! 
செம்மொழிக்கு எம்மொழியும் ஈடியில்லை 
செத்துமடிகிறது தாய்மொழியும் தமிங்கிலத்தில் 
தமிழன் பேசுவதும் தமிழில்லை 
தமிழன் சிந்திப்பதும் தமிழில்லை 
கன்னித் தமிழைக் கற்றுக்கொள் 
கவலை எல்லாம் மறந்திடுவாய் 
நல்லத் தமிழில் பேசிடுவோம் 
நாடெங்கும் ஒன்றுகூடி நாள்தோறும்! 
தமிழர்களே தாய்ப்பாலை உண்ணாமல் 
கள்ளப்பாலைத் தேடாதே நாடெங்கும் 
இனிக்கின்ற தேனாக தமிழிருக்கு 
இலக்கணத்த pன் சீர்வரிசையில் உயிரிருக்கு 
பைந்தமிழைப் பழுதில்லாமல் பயின்றிடுவோம் 
பழந்தமிழரின் பண்பாட்டை பேணுவதற்கு 
மேதினியில் ஈடற்ற குறளீந்து 
மேன்மை பெற்றதும் தமிழ்தானே! 
இரா. பாண்டியராஜன் 

முழுநேர முனைவர்ப்பட்ட ஆய்வாளர், 
இக்கால இலக்கியத் துறை, தமிழியற்புலம், 
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 
மதுரை – 21, அலைபேசி: 77088 16075. 

************************
தாய்மொழிப் பற்றுக்கொள் தமிழா!

கலைகளைக் கல்வியாக காப்பியமாக கண்டுரைத்து 
காணாத விடயங்களை உணர்வாக எடுத்துரைத்து 
உறைந்திடாத உதயங்களை உண்மையாக பாட்டுரைத்து 
உணர்த்திடாத மொழிகளுக்கு உலாவரும் மொழி தாய்மொழி! 
கொள்ளையான அழகினையெல்லாம் கொள்ளை செய்திட 
கொள்குறி வகையெல்லாம் வள்ளையாக ஆடிட 
மண்டிடாத வளமெல்லாம் இம்மையில் பெற்றிட 
மதுரமான மாண்பான மங்கையான மொழி தாய்மொழி! 
தொடடணையால் துள்ளிவரும் துல்லியமான நுண்ணுர்வு 
பாட்டணையால் பாடிவரும் பசுமையான பாவுணர்வு 
காட்டணையால் நாடிவரும் செம்மையான செவியுணர்வு 
வற்றாத வளங்களாய் நலம் கொழிக்கும் நிலங்களாய் தாய்மொழி! 
அண்டச் சீறாவை அகழ்ந்து எடுத்திட 
அறியாமையை ஆற்றாமையை பெயர்த்து கொடுத்திட 
விண்ணையெல்லாம் விளக்கமாய் வியந்து உரைத்திட 
வினையாய் விரிவாய் வியப்பாய் வரும் தாய்;மொழி! 
உள்ளான உணர்ச்சியினை உருக்கமாய் ஊற்றிட 
உண்மை ஊற்றினை உயர்வாய் உணர்த்திட 
சிறப்பான சிந்தனைகளை செறிவாய் செப்பிட 
சிங்கத் தமிழா சிந்தனைகொள் தாய்மொழிப் பற்றுகொள்! 
பிறவா பிறவியாய் பிறப்பெடுத்த நாமெல்லாம் 
பிதற்றும் பித்தர்களைத் தகர்து;து எறிந்திட 
பிறமொழிச் செல்வமெல்லாம் தாய்மொழியில் உள்வாங்கிட 
பற்றுக்கொள் தமிழா பற்றுக்கொள் தாய்மொழிப் பற்றுக்கொள்! 

கவிதாயினி. ச. முத்துப்பாண்டியம்மாள் 
முழுநேர முனைவர்ப்பட்ட ஆய்வாளர், 
தமிழியல் துறை, தமிழியற்புலம், 
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 

மதுரை–21. அலைபேசி: 95003 65366. 
**********************

மின்படங்கள் 

















































***************************