படங்கள் புகைப்படக் கலைஞர் மதுரை உலா ,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .










**என்றும்மகிழ்வோம்எந்தமிழ்சிந்தனையில் (29.3.2026)**
உலகில்ஆயிரமாய்உறவாடும்மொழிகளில்
உள்ளபடிதமிழொன்றேஊரறிந்ததெளிந்தமொழி
நலமாய்நயமாய்நாடெல்லாம்இடம்காணும்
நம்மொழிதான்எந்நாளும்நடனமிடும்திடமாக
நிலவொளியாய்த்திகழும்நீடுபுகழ்கண்டமொழி
நினைத்தால்இனிக்கும்நெறிகள்பலகொண்டமொழி.
எந்தமிழைநினைத்தால்எழுகின்றமகிழ்வில்
ஏராளசிந்தனைகள்எந்நாளும்பிறந்திடும்
சிந்தைக்குஇதமளிக்கும்செம்மையாய்துணைபுரியும்
சேர்ந்துஇருப்போர்க்கும்செறிவானவரமளிக்கும்
பந்தமதைக்காக்கும்பரவசத்தைஊட்டும்
பட்டிதொட்டிஎல்லாமேபரந்தேநிலைத்திருக்கும்.
வேறெந்தமொழிமீதும்வேட்கைஎழவில்லை
வீண்வாதம்இங்கில்லைவேறெதுவும்படவில்லை
யாரென்னசொன்னாலும்எவரென்னமறுத்தாலும்
ஆராய்ந்துபாருங்கள்அரைநொடிகருத்தாக
நேரெதிரேஇதைமறுத்தால்நின்றுநான்சாற்றிடுவேன்
நிச்சயம்எல்லோரும்நெஞ்சாரஏற்றிடுவார்.
தமிழென்றுசொன்னாலேதரணியின்றுவியக்கிறது
தடைகள்எதுவரினும்தாண்டியேகடக்கிறது
திமிராகச்சொல்லிடலாம்தேர்வானசெம்மொழிதான்
தெளிந்துசிந்தித்தால்திகைப்பூட்டும்நம்மொழிதான்
நிமிர்ந்தநடைபோட்டுநேர்வழிப்பாதையில்
நெடுநாள்பயணித்தால்நெஞ்சுக்குள்போதைதான்.
முனைவர்இரா. வரதராசன்( 98421 64978 )
*************
என்றும் மகிழ்வோம் எந்தமிழ் சிந்தனையில்!
- கவிஞர் இரா. இரவி
*****
யாதும் ஊரே யாவரும் கேளிர் உரைத்தது தமிழ்
கனியன் பூங்குன்றன் பாடியது அமெரிக்காவில் உள்ளது!
அறம் செய்ய விரும்பு என்று அன்றே
அவ்வை பாடினாள் அறத்தை வலியுறுத்தி!
பிறப்பொக்கும் எல்லா உயிரும் சமம் என்று
பாடினார் உலகப்பொதுமறையில் திருவள்ளுவர்!
ஞாயிறு போற்றுதும் திங்கள் போற்றுதும்
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பாடினார்!
எண்ண எண்ண இனிக்கும் எந்தமிழ் சிந்தனைகள்
எண்ணிய வழி நடந்தால் வாழ்க்கை சிறக்கும்!
ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடு பயிற்றுவித்தது தமிழ்
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உணர்த்தியது தமிழ்!
அற இலக்கியத்தின் களஞ்சியம் கன்னித்தமிழ்
அறத்தையே அன்றும் என்றும் பாடிய பைந்தமிழ்!
அகநானூறு புறநானூறு அகத்திணை புறத்திணை
ஐந்திணை என பாடி சிறந்தது செந்தமிழ்!
எண்ணிலடங்கா இலக்கியங்களின் பெட்டகம் தமிழ்
இலக்கணங்கள் வகுத்த தொல்காப்பியமும் தமிழ்!
சங்க இலக்கியத்தின் சங்கமம் சங்கத்தமிழ்
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த வரலாறு உண்டு!
வேறு எந்த மொழிகளுக்கும் இல்லாத சிறப்புகள்
வண்டமிழுக்கு உள்ள வளமான மொழி தமிழ்!
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் பாயுது
செந்நாப் புலவர் பாரதி பாடியது முற்றிலும் உண்மை!
••••••














29/3/2026
மாமதுரைக் கவிஞர் பேரவை மதுரை
சிந்தனைக் கவியரங்கம்
என்றும் மகிழ்வோம் எந்தமிழ்ச் சிந்தனையிலே
-----------------------------------
அந்தமிலாத் தமிழ்மொழியே அமுதத்தின் ஆழ்சுவையே
சிந்தனையில் எப்பொழுதும் சீர்மிகுத்து வருபவளே
புலன்களுள்ளே உணர்வுகளாய்ப் புகுந்திட்ட புத்துயிரே
நிலத்துதித்த மனிதப்பூ நினைத்திட்ட முதல்மொழியே
இனிமையோடு இளமையோடு இணையின்றித் தோன்றியவளே
தனித்துவமாய்த் தலைநிமிர்ந்து தரணிதனை ஆள்பவளே
இயலென்றும் இசையென்றும் இன்சுவைநா டகமென்றும்
நயம்நிறைந்த மொழியழகும் நடையழகும் தமிழொன்றிலே
தொல்காப்பியம் இலக்கணமோ தொன்மையினப் பறைசாற்றுமே
சொல்லழகும் ஐந்நிலத்தின் சுகமான வாழ்வுநெறியும்
வயலோடு உறவாட வளத்தோடு செழித்தாட
இயற்கைநெறி வாழ்வியலின் எளிமையான அகம்புறங்கள்
கற்புநெறி களவுநெறி கலந்திட்டக் கலாச்சாரம்
சிற்பக்கலை நடனக்கலை செந்தமிழர் வீரக்கலை
முச்சங்கம் மூலமாக மொழிகாத்தல் தமிழொன்றிலே
பச்சையிலை மருந்துகளும் பாவினிக்கப் பரப்பிவைத்தார்
பிரபஞ்சச் சூட்சுமங்கள் பெருவெடிப்பு ரகசியங்கள்
கிரகங்கள் தாரகைகள் கிரகணங்கள் ஆய்ந்துவைத்தார்
ஓங்கார ஒலியொன்றே ஒலித்திடுமே பரவெளியில்
பாங்கோடு பாடிவைத்தார் பல்லாயிரம் ஆண்டுமுன்னே
பொதுமறையாம் திருக்குறளை போற்றிடுதே வையகமே
மதுரத்தமிழ் இலக்கியங்கள் மலர்மதுவை மிஞ்சிடுமே
வென்றுலகோர் உள்ளத்திலே வீற்றிருக்கும் செந்தமிழே
என்றும்நாம் மகிழ்ந்திடுவோம் எந்தமிழின் சிந்தனையிலே!
=================
மதுரை சுந்தரம் பாண்டி 7200018958
*********
*மா மதுரைக் கவிஞர்* *பேரவை*
*மதுரை*
சிந்தனைக் கவியரங்கம் -


நாள் : *29.04.2026*
*என்றும்*
*மகிழ்வோம்**
*எந்தமிழ்* *சிந்தனையில்*
தொன்று தொட்டு
தொடர்ந்து வரும் *தமிழே!*
தொப்புள் கொடி
படர்ந்து தரும் *தமிழே !*
(2)
அன்னை தந்தை
கொஞ்சிக் குலாவிய *தமிழே* !
முந்தையோர் நாவில் உலாவிய
*மூத்த தமிழே!*
(4)
தன்னை அறிவதே
தகைசால் *மெய்யறிவே! .*
முன்னை அறிந்த
முழுமை *முத்தமிழே!*
(6)
தந்தை தாய் சேர்ந்து
தந்த *உடலே!*
முந்தி ஓடி சார்ந்த
ஒப்பற்ற *உயிரே* !
வந்த உயிரோடு
உறவான *உணர்வே!* **
சொந்த உணர்வில்
*சுயமான தமிழே* !(10)
பேசும் தமிழால்
பிறக்கும்
*உமிழ் நீரே!*
எண்ணும் எண்ணம்
பண்ணும் *வண்ணம்!*
கண்ணும் கருத்தும்
கலந்து
*நிறையும்**
உண்ணும் உணவில்
உயிர்ச் சத்துத் *தமிழே !*
( 14)
என்னை என்னுள்
உணர்த்திய
*என் தமிழே!*
பின்னை ஒரு பிறவி எடுத்தாலும்
- *தமிழ்*
அன்னை ஒருத்தித் *தாயாக* *வரவேண்டும் !*
என்னை இருத்தித் *தமிழ்ப் பால்*
*தர வேண்டும்* !(18)
பேசி மகிழ
வாய் *இனிக்கும்!* -இசைத்து
வாசிக்க
செவி *இனிக்கும்* !
நேசித்துச் சுவாசிக்க வாழ்நாள் *கூடும்* !- *தமிழே*
யாசிக்கச் சென்றாலும்
*மறவேன்*
*உன்னை!*
(22)
நின்றாலும் நடந்தாலும்
நெடுஞ் சாண் கிடந்தாலும்
*என்றும் மகிழ்வோம்!*
*எந்தமிழ்* *சிந்தனையில்!* (24)
நாசி வழிச் செல்லும் நல்ல *மூச்சும்*
நாவு மொழிச் சொல்லும்
நல்லப் *பேச்சும்*
நேசமதில் நீடிக்கும் உயிர் *மூச்சும்*
பாசமதில் பற்றி வாழும் *பைந்தமிழே!*
எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்
29.03.2025
சித்தாந்த ரத்தினம்
*எஸ் வி ஆர் மூர்த்தி* பெங்களூர்
நாள் : 28.03.2026
*******
என்றும் மகிழ்வோம் எந்தமிழ் சிந்தனையில்
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
செவிக்கும் சிந்தனைக்கும் ஓய்வு கிடைக்குமா?
செந்தமிழைச் சுவைக்க கூலி வேண்டுமா?
மகிழ்ச்சியை அனுபவிக்கத் தடை இருக்குமா?
மகா செம்மொழியை அழிக்க முடியுமா?
கண்களுக்கு நல்விருந்து அளிக்கும் தமிழ்
காதுகளில் தேனிசையாய் ஒலிக்கும் தமிழ்
அறுசுவை அமுதமாய் ருசிக்கும் தமிழ்
அன்பையும் அறிவையும் தந்திடும் தமிழ்
இலக்கண இலக்கியத்திற்கு இயல் தமிழ்
இயற்கையொலியில் இயைந்த இசைத் தமிழ்
நடிப்பால் பொழுதுபோக்கும் நாடகத் தமிழ்
நற்சிந்தனை வளர்க்க இவைகளே தமிழ்ச்சுரபி.
மான் என்பார் தேன் என்பார்
மல்லிகை மணம் வீசும் என்பார்
தமிழின் அழகை நிலவோடு ஒப்பிடுவார்
தேய்வதும் வளர்வதும் மாயையெனப் பாடுவார்.
என்றும் இளமை எந்நாளும் புதுமை
எந்தமிழ் சிந்தனையில் எந்நாளும் இனிமை
மொழிகளுக்கு மூத்தது தமிழுக்கே உடைமை
மறவாமல் காப்பதே தமிழனின் கடமை
***********************
AI Review
அருமையான புதுக்கவிதை! 👏
உங்கள் வரிகளில் தமிழின் பெருமையும், இனிமையும், உயிரும் மிக அழகாக வெளிப்படுகிறது.
சில சிறப்பு அம்சங்கள்:
- கேள்வி வடிவ தொடக்கம் மிகவும் வலிமையானது — வாசகனை சிந்திக்க வைக்கிறது.
- “செந்தமிழைச் சுவைக்க கூலி வேண்டுமா?” — மிக ஆழமான, நினைவில் நிற்கும் வரி.
- தமிழின் ஐம்பெரும் பண்புகள் (இயல், இசை, நாடகம்) மிக நயமாக இணைக்கப்பட்டுள்ளன.
- மான், தேன், மல்லிகை, நிலா போன்ற உவமைகள் — பாரம்பரியமும் புதுமையும் சேர்ந்து வருகின்றன.
- கடைசி நான்கு வரிகள் — ஒரு தமிழ் உறுதிமொழி போல உள்ளது 🔥
சிறிய பரிந்துரை (இன்னும் தாக்கம் அதிகரிக்க)
கடைசி பகுதியை இன்னும் உறுதியான “call to action” போல மாற்றலாம்:
மறவாமல் காப்பதே தமிழனின் கடமை
👉 இதை
மறந்திடில் அழிவோம் – காப்பதே கடமை
என்று மாற்றினால் இன்னும் தீவிரம் கூடும்.
*************
***********