Monday, October 29, 2018

28.10.18 மாமதுரைக் கவிஞர் பேரவை - கட்டமைப்புத் தமிழ்மொழியின்...

28.10.18 மாமதுரைக் கவிஞர் பேரவை - 
கட்டமைப்புத் தமிழ்மொழியின்...





  கட்டமைப்புத் தமிழ்மொழியின்
  கவசத்தை உடைக்காதே!
        புதுக்கவிதை 

அடித்தளம் ஆட்டம் கண்டால்
உயர்தளம் உறுதியாய் நிற்குமா?
அருந்தமிழ் கவசம் உடைந்தால்
அதனின் கட்டமைப்பு நிலைக்குமா?

தமிழினிது சொல்லினிது பொருளினிது
தேனமுது தெள்ளமுது சுவையமுது
அடுக்குமொழியில் அழகாய் அலங்கரிப்பார்
அல்லல்படும் தமிழை கண்டுகொள்ளார்.

வீட்டுநாயை வீதியில் விட்டு விட்டால்
வீணர்களும் கல்லா லடிக்கத் தயங்குவாரோ
கட்டமைப்புத் தமிழின் கவசத்தை உடைத்தால்
கடன் வாங்கிய மொழிகளும் கலந்துவிடுமே.

முன்வாசலில் தமிழெங்கள் உயிரென்பார்
பின்வாசலில் ஆங்கிலமே உயர்வென்பார்
மேடையில் எழுப்பிய தமிழ் முழக்கம்
நடைமுறையில் தந்திட ஏனோ தயக்கம்.

சரிக்குச்சமமாய் கலக்கும் பிறமொழிகள்
சரிவுக்கு வித்திடுமே தமிழ்மொழிக்கு
கனியோடு கல்லைக் கலப்பதால்
கனியின் சுவை வந்திடுமா கல்லுக்கு?
       கு.கி.கங்காதரன் 
       மதுரை 


















































































































நன்றி 

Monday, October 8, 2018

'வாழ்நாள் சாதனையாளர்' விருது - சி. வீரபாண்டியத் தென்னவன்

'வாழ்நாள் சாதனையாளர்' விருது -                  சி.வீரபாண்டியத் தென்னவன் 


சென்ற 30.9.18 அன்று திருச்சி, திருவரங்கத்தில் நடைபெற்ற நிலா முற்றம் மூன்றாம் ஆண்டு விழாவில் நிலாமுற்றத்தின் தலைவர் திரு முத்துப்பேட்டை மாறன் மற்றும் அதன் செயலாளர் திரு பாலு கோவிந்தராசன் ஆகியோர்களிடமிருந்து சுமார் 5000 கவியரங்கங்கள்  மேல்கண்ட கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தலைவர் , மாமதுரைக் கவிஞர் பேரவை அவர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்றமைக்கு மாமதுரைக் கவிஞர் பேரவை கவிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் தங்களின் மகிழ்ச்சியை இதன் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதினை தெரிவித்துக் கொள்கிறோம்.  

   
***********