Sunday, May 14, 2023

30.4.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் 10 - சிலம்பில் மூவேந்தர் பெருமை & நூல் வெளியிடு

  

நாள் 30.4.2023.வடக்குமாசி வீதி. மணியம்மை பள்ளி. மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார் . நன்றி.புகைப்படக் கலைஞர்கள் ரெ.கார்த்திகேயன்,மோகன். மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது"சிலம்பில் மூவேந்தர் பெருமை" என்ற தலைப்பில் ,கவிஞர்கள் இரா .கல்யாணசுந்தரம் இரா .இரவி ,கங்காதரன் ,முனைவர் வரதராசன் ,கி .குறளடியான் ,புலவர் நாள் 30.4.2023.வடக்குமாசி வீதி. மணியம்மை பள்ளி. 
மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.

தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். 

நன்றி.புகைப்படக் கலைஞர்கள் ரெ.கார்த்திகேயன் & மோகன்.

மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. "சிலம்பில் மூவேந்தர் பெருமை" என்ற தலைப்பில் கவிஞர்கள் இரா. கல்யாணசுந்தரம், இரா.இரவி, கு.கி.கங்காதரன், முனைவர் வரதராசன்,  கி.குறளடியான், புலவர் முருகுபாரதி, மா.வீரபாகு, ச. லிங்கம்மாள், சாந்தி திருநாவுக்கரசு, நா.வேலுச்சாமித்துரை, எம். இராம.பாண்டியன், செ.அனுராதா, மா.முனியாண்டி, மு .இதயத்துல்லா, கு.பால் பேரின்பநாதன், சம.சமயக்கண்ணன் ஆகியோர் கவிதை பாடினார்கள் .முனைவர் வரதராசன் எழுதிய நூல் வெளியிடப்பட்டது



                                   

















சிலம்பில் மூவேந்தர் பெருமை
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்

பண்டைய காலத் தமிழகத்தின் எதிரொலிப்பு
பார் மெச்சும் தமிழ்மொழியின் காப்பு
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒரு முத்தாய்ப்பு
இளங்கோ அடிகளார் சிலப்பதிகாரம் படைப்பு 

துறவி இளங்கோ அடிகளார் நோக்கம்
சிலம்பில் மூன்று காண்டங்களால் ஆக்கம்
கற்பின் அரசி கண்ணகியின் தாக்கம்
இயல் இசை நாடகமும் அடக்கம்

ஈரைந்து காதைகளால் புகார்க்காண்டம் 
ஐந்தெட்டு காதைகளால் மதுரைக்காண்டம்
ஆறேழு காதைகளால் வஞ்சிக்காண்டம்
அமைந்ததே சிலப்பதிகாரக் காவியம் 

சோழன் கட்டுவித்த கல்லணை 
சேரனின் கடல்தாண்டிய வாணிபம்
பாண்டியன் வளர்த்த தமிழ்ச்சங்கம்
பறைசாற்றுமே மூவேந்தர் பெருமை..

மலைநாடான் சேரனின் மகிமை
வளநாடான் சோழனின் பசுமை
தமிழ்நாடான் பாண்டியனின் தலைமை
தெரிவிக்குமே மூவேந்தர் ஆளுமை ..

சோழன் பெருவளத்தான் நீரும் வளமும்
சேரன் செங்குட்டுவன் போரும் வீரமும்
பாண்டிய நெடுஞ்செழியன் பழியும் பிரிவும்
பக்குவமாய் வார்க்கப் பெற்றதே சிலப்பதிகாரம்.

*********************

Friday, April 7, 2023

26.3.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் - வாழும் தமிழே வரலாறு கூறும்!






மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.வடக்குமாசிவீதி மணியம்மை பள்ளி.இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம்நடந்தது 

மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில், மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம். நாள் : 26.3.2023

           தலைப்பு : வாழும் தமிழே வரலாறு கூறும்!

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில்,  கவிஞர்கள் முனைவர் இரா.வரதராசன், இரா.கல்யாணசுந்தரம், இரா. இரவி,  பாவலர் குறளடியான்,   கு.கி.கங்காதரன்,  ச.லிங்கம்மாள்,  அஞ்சூரியா.க.செயராமன், பெரி.கரு.சம. சமயக்கண்ணு,  சங்கர்,  முனியாண்டி,   கோ.சங்கரநாராயணன்,  மு.இதயத்துல்லா, அ.அழகையா, புலவர்.முருகுபாரதி,  சாந்தி திருநாவுக்கரசு,   மா.வீரபாகு,  ஆகியோர் ‘வாழும் தமிழே வரலாறு கூறும்!’ என்ற தலைப்பில் கவிதை பாடினார்கள். 

மின்படங்கள்: இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.






                            வளரும் தமிழே வரலாறு கூறும்
                                    - கவிஞர் இரா. இரவி 

கீழடி வரலாறு நம் தமிழின் வரலாறு
கீழ்அடியில் கிடைத்ததில் தமிழ் எழுத்துக்கள்!

எழுத்தறிவோடு வாழ்ந்தவர்கள் தமிழ்க்குடிமக்கள்
எந்த நாகரீகத்திற்கும் முந்தைய நாகரீகம்!

உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்
உலகம் உணர்ந்தது தமிழன் தான் உணரவில்லை!

உலகமொழிகளின் மூலம் நமது தமிழ்மொழி
உலகமொழிகள் அனைத்திலும் உள்ளது தமிழ்!

ஆங்கிலம் தொடங்கி அத்தனை மொழியிலும் தமிழ்
அற்புதத் தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழியே இல்லை!

உலகின் முதல்மொழிக்குச் சொந்தக்காரன் தமிழன்
உலகம் வியந்து பாராட்டும் மொழி தமிழ்மொழி!

நீண்ட நெடிய வரலாறு படைத்த மொழி தமிழ்
நாம் அனைவரும் தமிழ் வளர்க்க வேண்டும்!

தமிங்கில உரையாடலுக்கு முடிவுரை எழுதிடுவோம்
தமிழை தமிழாகவே நாளும் பேசிட உறுதி எடுப்போம்!

பிறமொழி கலப்பை உடன் நிறுத்திடுவோம்
பண்டைத்தமிழைக் காத்திட தரணியில் திரள்வோம்!

தேசப்பிதா காந்தியடிகள் விரும்பியது தமிழ்மொழி
தேசங்கள் தோறும் ஒலித்திடும் தமிழ்மொழி!

ஒப்பற்ற உயர்ந்த தனி செம்மொழி தமிழ்மொழி
ஓங்கி உரைப்போம் முதல்மொழி தமிழ்மொழி!

அழியாமல் தமிழை காப்பது நமது கடமை
அணியமாவோம் அழகுதமிழை நாளும் வளர்ப்பதற்கு!
















                    வளரும் தமிழே வரலாறு கூறும் 
                                  புதுக்கவிதை
                               கு.கி.கங்காதரன்

எல்லாச் சம்பவங்கள் வரலாற்றில் பதியாது 
எல்லா வரலாறும் மக்களிடையே பேசாது 
என்றோ தொடங்கியது தமிழின் வரலாறு 
இன்றும் தொடர்கிறது தமிழின் வரலாறு.

ஆதியில் அவதரித்த அமுதமான மொழி 
அகிலம் போற்றும் பண்புள்ள பண்பாடு 
எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும் கலாச்சாரம்  
அனைவரையும் சமநோக்கி அணுகும் நாகரிகம்   

கற்காலம் தொடங்கி வளர்கின்ற தமிழ்
கணினிகாலம் என்று தொடர்ந்திடும் தமிழ்
இனிவரும் காலத்திலும் மிளிர்ந்திடும் தமிழ்
என்றும் தலைசிறந்து நின்றிடும் தமிழ்.

சேரசோழ பாண்டியர்கள் வளர்த்த மொழி 
சிங்கநடை போடும் கம்பீரமான மொழி 
கப்பலோடு கடல்கடந்து பயணித்த மொழி 
கன்னித்தமிழாய் காட்சி தரும் சிங்காரமொழி 

தமிழே மொழிகளின் வரலாற்றில் இன்றியமையாதது 
தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் கிடைத்திருப்பது
தமிழை வான்புகழுக்கு உயர்த்தியது திருக்குறள் 
தனித்தமிழில் சிறப்பாய் அமைந்ததே கம்பராமாயணம் 

முக்கலைகளில் முடிசூடியது எங்கள் தமிழ்
முக்காலங்களில் வரலாறு படைப்பது தமிழ்
எத்திசையிலும் ஓங்கி ஒலிப்பது தமிழ்
என்றும் வரலாற்றில் நிலைப்பது தமிழே
**************************************************************