Monday, December 31, 2018

30.12.18 மா.க.பே. நெகிழிகளால் நிலம் கெடுமே! கிரந்தெழுத்தால் தமிழ் கெடுமே!!

30.12.18    மாமதுரைக் கவிஞர் பேரவை 
கவியரங்கம் 







மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு

நெகிழிகளால் நிலம் கெடுமே!
கிரந்தெழுத்தால் தமிழ் கெடுமே!!

கவிஞர் இரா. இரவி.

நெகிழி மண்ணை மலடாக்கிக் கெடுக்கும்
கிரந்த எழுத்து தமிழின் சீரைக் குலைக்கும்!

நெகிழி உண்டு விலங்குகள் மடிந்துவிடும்
கிரந்த எழுத்தால் நல்தமிழ் நலிந்து விடும்!

உண்ணும் உணவில் நஞ்சு கலக்கலாமா?
உன்னதத் தமிழில் கிரந்தம் கலக்கலாமா?

நெகிழியில் சூடானவை கலக்க புற்றுநோய் வரும்
நம்தமிழில் கிரந்தம் கலக்க கேடு வரும்!

நெகிழி வேண்டாம் மஞ்சப்பை வேண்டும்
கிரந்தம் வேண்டாம் காந்தத்தமிழ் போதும்!

நெகிழிக் குப்பை மண்ணில் மக்காது
கிரந்தம் கலந்து பேசினால் மக்காவாய்!

நெகிழி அழித்தது நிம்மதியான வாழ்வை
கிரந்தம் அழித்தது தூயதமிழ்ப் பேச்சை!

திட்டமிட்டால் ஒழித்து விடலாம் நெகிழியை
திட்டமிட்டால் ஒழித்து விடலாம் கிரந்தத்தை!

வருங்கால தலைமுறைக்கும் நஞ்சு நெகிழி
வருங்கால தலைமுறைக்கும் நஞ்சு கிரந்தம்!

ஒழிப்போம் ஒழிப்போம் நெகிழியை ஒழிப்போம்
ஒழிப்போம் ஒழிப்போம் கிரந்த எழுத்தை ஒழிப்போம்!

நெகிழியின் பயன்பாட்டால்  நெழிந்தது சமுதாயம்
கிரந்தெழுத்து பயன்பாட்டால் தமிழுக்கும் சிறுமை!

உடலுக்கு புற்றுநோய் தரும் நெகிழி நீக்கு
உலகின் முதல்மொழியில் கலப்படம் தீங்கு!

விழிப்புணர்வு வேண்டும்! நெகிழி வேண்டாம்!!
விழிப்புணர்வு வேண்டும்! கிரந்தம் வேண்டாம்!!

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

*********************************************************************
வெல்க தமிழ்!
நெகிழிகளால் நிலம் கெடுமே!
கிரந்த எழுத்தால் தமிழ் கெடுமே!
   
மதுரை..பாண்டியன்
1சிஇராக்கப்பக்கோனார் சந்து
கொத்தாலத்தெரு,
அயன்பாப்பாக்குடி,
அவனியாபுரம்,
மதுரை-625012.
/பே9245571522.

தன்னொளி பெற்றுத் திகழ்கின்ற இரத்தினமாய்
தமிழ் என்றும் சுடர்வீசித் திகழுவதாய்
கண்ணோளி பட்டுத் தெரியும் காட்சியெல்லாம்
எண்ணக் கதவின் மொழிவழி வளர்ச்சியால்தான்!


என்ன இல்லை தமிழ்மொழியில் எடுத்தியம்ப
எதனாலே மதியிழந்து கலங்க வேண்டும் கூறு!
எண்ணும் எழுத்தும் தமிழின் உயர்வன்றோ!
இயம்ப இயம்ப இனிக்கும் அமுதன்றோ!


புகழிடமே தேடிவந்த பிறமொழி எழுத்துக்கள்
பகலவனாய் ஒளிர் விடும் தமிழினுடே
இகழும் வகை இன்றிருப்போர் கெடுப்பதென
இச்சகத்தில் தமிழ்தான் எப்படித்தான் வளரும்!


நெகிழிகளால் நிறைந்த நிலம் கெடுவதென
கிரந்த எழுத்துக்களால் தமிழ் கெட்டுவிடும்
வெகுளித் தனமாய் வாழ்ந்து திரிந்தாலே
வாழ்வு வழித்தடம் தெரியாமல் போய்விடும்!


தமிழராய் பார்த்து திருந்தாவிட்டால் என்றும்
தமிழை வளர்க்க முடியாது! தொடர்பிலா
ஒண்டவந்த பிசாசை இல்லாமல் ஆக்காவிட்டால்
தரணியில் தமிழர் தலைநிமிர்ந்திருக்க முடியாதே!


தமிழால் தான் தமிழரின் மானம்வாழும்!
தமிழ் இன்றேல் தமிழர்தம் வாழ்வுவீழூம்!
அமிழ்தினும் அகிலத்தே சிறந்து விளங்கும்
அன்னைத்தமிழ் அரசாள முழக்கம் செய்வோம்!
 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


     நெகிழிகளால் நிலம்கெடுமே
    கிரந்தெழுத்தால்தமிழ்கெடுமே
           கு.கி.கங்காதரன் 

எங்கும் துணிஎதிலும் துணி மாறி
எங்கும் நெகிழிஎதிலும் நெகிழிஆனது
எங்கும்தமிழ்எதிலும்தமிழ் மாறி
எங்கேதமிழ்எதிலேதமிழ்ஆனது.

மனிதஇனத்தைஅழிக்குமே நெகிழிஅவதாரம்
மக்கும்இனம் காக்குமேமனித வாழ்வாதாரம்
தமிழ்மொழியைஅழிக்குமே கிரந்தெழுத்துகள்
தமிழ்இனத்தைக் காக்குமேதனித்தமிழ் எழுத்துகள்

அபாயமணி நெகிழிக்குமட்டுமல்லாது
அந்நியமொழிகலந்ததமிழுக்கும் கூடவே
நெகிழிஅழிக்கச்சட்டம்இயற்றும்அரசு
நச்சுகலப்பைத்தடுத்தால்தமிழுக்குப்பரிசு.

புதைத்தால்மடலாகும் பூமி
எரித்தால்நஞ்சாகும் காற்று
கலந்தால் மாசாகும்கடல்
உண்டால் பிணியாகும்உடல்.

சிங்கநடைப் போட்டத்தனித்தமிழ்
அசிங்கமானது கிரந்தஎழுத்துகளாலே
வெகுளித்தமிழர்களால்வந்த வினை

வெட்கிக் குனியும்தமிழின் நிலை.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
 மின்படங்கள் 

































































நன்றி 

1 comment:

  1. மிக்க நன்றி.பாராட்டு

    ReplyDelete