31.3.2019 அன்று மூன்றாம் ஆண்டு நான்காம் திங்கட் கவியரங்கம் மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை, மதுரை நடத்திய நிகழ்ச்சியின் தொகுப்பு :
* அன்று வாசித்தக் கவிஞர்களின் கவிதை தொகுப்பு
*மின்படங்கள்
*சிறப்பானக் கவிதை தந்த மூன்று கவிஞர்களுக்கு பாராட்டும், பரிசும் தந்து சிறப்பிக்கப்பட்டது.
*நமது கவியரங்க ஒளிப்பட ஓவியர் கனகமகால் ரெ. கார்த்திகேயன் அவர்களின் 49வது பிறந்த நாள்விழா நடந்தது.
தொலைக்காட்சி விளம்பரமா?
தமிழ்க்கொல் கொலைகரமா?
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன், மதுரை. 9865642333
எண்ணற்றத் தொலைக்காட்சியில் தமிழ் சேவைகள்
ஆங்கிலப் பெயர்களில் அயராதத் தமிழ் ஒளிபரப்புகள்
காசுக்கொட்டி காட்டப்படும் தமிழ் விளம்பரங்கள்
காதுகளை இரணமாக்கும் தமிழ் உச்சரிப்புகள்.
கல்விக்கூடத்தில் தமிழ் தமிழாய் வாழ்கிறது
காட்சி ஊடகத்தில் தமிழை வதைகிறது
அழகுத்தமிழில் பேசினால் கேலி செய்கிறது
ஆங்கிலத்தமிழில் பேசினால் வரவேற்கிறது
தமிழில் தலைப்பு இல்லாத படங்கள்
தமிழுக்குத் தேர்வான சிறந்த படங்கள் - அது (ஜோக்கர், டாய்லெ ட்)
தமிழுக்குப் போட்ட சுருக்குக்கயிறு - அது
தமிழை அழிக்கும் தூக்குக்கயிறு.
மலிவு விலை பொருட்களுக்கு மவுசு மிகுதி
மலிவான தமிழுக்கே மவுசுக்குத் தகுதி
புறம்போக்கு நிலமாய் தமிழ்மொழி மாறியது
பொழுதுபோக்குப் பட்டியலில் தமிழும் சேர்ந்தது.
வணிக உலகம் தமிழைப் பாடாய்ப் படுத்துகிறது
வாய்க்கு வந்தபடி ஆங்கிலத் தமிழை பேசுகிறது
மதிகெட்டுக் கைத்தட்டி தமிழை நகைக்கிறது
மானம் இழந்து பக்கவாத்தியம் வாசிக்கிறது
தொலைந்தது ஊடகங்களில் தனித்தமி ழ் நிலை
தொடர்கிறது தொலைக்காட்சியில் தமிழ்க் கொலை
சிதைகிறது பேச்சுவழக்கில் தமிழ்ச்சிலை
சரிகிறது இலக்கியத்தில் தமிழ் மலை
************************
நன்றி
சிறப்பு.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்
ReplyDeleteஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
ReplyDelete