Tuesday, November 8, 2022

30.10.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் 4 - தலைப்பு : கற்பனையும் கவிதையும்

 

30.10.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் 4 - கற்பனையும் கவிதையும் 



மதுரை, மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 அளவில்  நடந்த கவியரங்கம். 

பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலர் கவிஞர் இரா.இரவி முன்னிலை வகித்தார்.

கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு அவர்களின் "பார்வைத் தீண்டல்கள்"நூல் வெளியிடப்பபட்டது.

புரட்சிக்கவிஞர் அறத்தின் தலைவர் பி .வரதராசன் வாழ்த்துரை வழங்கினார். கற்பனையும் கவிதையும் என்ற தலைப்பில் கவிஞர்கள் இரா இரவி, முனைவர் இரா.வரதராசன், கு.கி.கங்காதரன், கல்யாண சுந்தரம், சங்கர நாராயணன், அஞ்சூரியா க.செயராமன், மா.வீரபாகு, பொன் பாண்டி, இராம.பாண்டியன், ச.லிங்கம்ம்மாள், சாந்தி திருநாவுக்கரசு, குறளடியான், புலவர் முருகுபாரதி, பால கிருட்டிணன், சசி முத்து, அனுராதா, பால் பேரின்பநாதன்  ஆகியோர் கவிதை வாசித்தனர். 

படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் சம்பத் கை வண்ணம்.ஏற்பாடு இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன். 30.10.2022

















       கற்பனையும் கவிதையும்
                 புதுக்கவிதை
             கு.கி.கங்காதரன்

நிகழ்வுகள் நினைவுகளாகத் தங்கும்
நினைவுகள் எண்ணங்களாக மாற்றும்
எண்ணங்கள் கற்பனைகளாக மலரும்
கற்பனைகள் கவிதைகளாகப் பிறக்கும்

கற்பனைகள் செய்திடாத மனிதன்
கானங்கள் கேட்டிடாதச் செவிகள்
சிலைகள் வடித்திடாதப் பாறைகள்
மாலைகள் தொடுத்திடாதப் பூக்கள்

எளிமையாய் எடுத்துரைப்பது கவிதை
ஏக்கங்களைத் தீர்ப்பது கவிதை
காதல்நோய்கு மருந்தாவது கவிதை
கேட்போரை வீரமூட்டுவது கவிதை

அரசனை ஆண்டியாக்கும் கற்பனை
ஆண்டியை அரசனாக்கும் கற்பனை
நிலவினைக் கரங்களில் காட்டும் 
உலகினைப் பையில் போட்டிடும்

இருப்பதை இல்லாமல் செய்யும்
இல்லாததை இருப்பதாகச் சொல்லும்
உண்மையை பொய்யென உரைக்கும்
பொய்யை உண்மையென சாதிக்கும்

கற்பனை... கவிஞர்களை உருவாக்கும் 
கற்பனை... விஞ்ஞானிகளைக் கொடுக்கும்
கற்பனை... புதுமைகளுக்கு வித்திடும்
கற்பனை... படைப்பாளர்களைத் தந்திடும்

*******************************************

*******************

No comments:

Post a Comment