Friday, August 22, 2025

27.7.2025 கவியரங்கம் - 36 - கீழடி அறிக்கையை காலடியில் போடாதே! - நூல்கள் வெளியீடு - பேராசிரியர் சி .சக்திவேல் & கவிஞர் பா .பழனி

  






















மாமதுரைக் கவிஞர் பேரவை- 

சிந்தனைக் கவியரங்கம் - 36, 

27.7.2025 அன்று மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது. 

" கீழடி அறிக்கையை காலடியில் போடாதே" எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது


    தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி வரவேற்றார். பொருளாளர் இரா.கல்யாண சுந்தரம், துணைத்தலைவர் முனைவர் வரதராசன் முன்னிலை வகித்தார் . ஆலோசகர் வீர ஆதி சிவத் தென்னவன் வாழ்த்துரை வழங்கினார் . தலைவர் கவிஞர் பேராசிரியர் சக்திவேல் அவர்கள் தலைமையில் , கவிஞர்கள் இரா . இரவி , இரா .கல்யாணசுந்தரம் , முனைவர் இரா.வரதராசன், கு கி . கங்காதரன் , மகா முருகு பாரதி , குறளடியான் , பால் பேரின்பநாதன், ச. லிங்கம்மாள், சிவ சத்யா , தென்காசி புலவர் ம. ஆறுமுகம், இளையான்குடி இதயத்துல்லா, பா .பழனி , பா .பொன் பாண்டி,சு . பால கிருட்டிணன் ஆகியோர் கவிதை பாடினார்கள். 

            பேராசிரியர் சி .சக்திவேல் எழுதிய 'மகாகவி பேசுகிறேன்' என்ற கவிதை நூலும், கவிஞர் பா .பழனி எழுதிய 'எம் மொழியும் தமிழ் மொழியே' என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டது. நூல் ஆசிரியர்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் அவரவர் நூலை அன்பளிப்பாக வழங்கினார்கள். 

     பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய கவிஞர் பால் பேரின்பநாதன், கவிதாயினி சிவ சத்யா இருவருக்கும் தென்காசி திருவள்ளுவர் கழகம் வெளியிட்ட திருக்குறள் உரை நூலும் , முனைவர் வரதராசன் எழுதிய நூலும் பரிசாக வழங்கினர். துனைச் செயலர் கு கி .கங்காதரன் நன்றி கூறினார். கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி .வரராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் . 
             படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். 







கீழடி அறிக்கையை காலடியில் போடாதே! - கவிஞர் இரா. இரவி *****

 கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய முதல் இனம் தமிழினம்
 ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்போடு வாழ்ந்திட்ட இரும்பு மனிதன் 

கீழடி என்பது தமிழர்களின் தொன்மை வரலாறு கீழடி அறிக்கையை உலகம் அறிய வேண்டும் வெளியிட்டு அரசிதழில் அச்சிட வேண்டும்

 வீண்காலம் கடத்துவதை உடன் நிறுத்திட வேண்டும் அமர்நாத் இராமகிருஷ்ணன் தொல்லியல் அலுவலர் அளித்த அறிக்கை அப்படியே வெளியிட வேண்டும் 

 திருத்தச் சொல்லி கேட்பது கேடான செயல் திருத்த முடியுமா? பிரேத பரிசோதனை அறிக்கையை! 

 இடமாற்றம் செய்து இன்னல் பல தந்தபோதும் இன்முகத்துடன் உறுதியாக உள்ளார் அமர்நாத் அறிஞர் மிரட்டலுக்கு பயந்து மாற்றி இருப்பர்

 வேறு சிலர் மிடுக்கோடு மாற்றிட முடியாது என்கிறார் வீரர் புராண புழுகான சரஸ்வதி நதியை பாய்ந்து வந்து ஏற்பது என்பது மடமை காந்தி தேசத்தில் உண்மையை மறைக்கலாமா?

 கட்டாயம் கீழடி அறிக்கையை வெளியிட வேண்டும் தமிழரின் வரலாறு தொன்மை ஏற்க மறுப்பதேன் தமிழருக்கு எதிராகவே என்றும் செயல்படுவதேன்














                                                               

*கீழடி அறிக்கையை காலடியில் போடாதே*

ஆதி மனிதன் தமிழன் தானே 

ஆதி மொழியும் தமிழே தானே 

பாதியில் வந்த பரதேசி மொழியிங்கே

பாதிக்கும் என்றே பாதகம் புரிவதா 

கீழடியின் ஆழத்தில் கிட்டிய ஆதாரம் 

பாழடிக்கும் வஞ்சகர் பந்தாடும் தந்திரமோ

காலடியில் புதைப்பதோ கயவரைக காப்பதோ

வேலடியால் கீறியிங்கே வீழ்த்திட வேண்டாமோ

ஒன்றிய அரசின் ஒன்றாப் போக்கு 

ஒன்றிவரும் சங்கநூல்
ஒவ்வாச் சான்றென 

ஒதுக்கிடல் முறையோ ஒடுக்கிடல் நெறியோ 

கீழடி அறிக்கையை காலடியில் மிதிப்பதோ 

பாழடைந்த இருள்மனப் பாவியரை சிதைப்போம் 

சிந்து சமவெளியில் சிக்காத நாகரிகம் 

முந்தைத தமிழனின் மூத்த குடியில் 

விந்தையான நகரநீர் மேலாண்மை கட்டமைப்பு 

சிந்தனைத் தமிழனின் சிறந்த படைப்பு 

தமிழன் புகழைத்
தரணியெங்கும் சேர்ப்போம் 

நிமிர்ந்து நிற்போம் நாமார்க்கும் குறைவல்லோம் 

மூடி மறைக்கும் அழிக்கும் ஒழிக்கும் 

மோடி மஸ்தான் வேலைகளை ஒழிப்போம்

தொன்மை ஏற்கா துன்பியல் கொண்ட 

வன்மமுடை வடக்கரை வன்மையாய் கண்டிப்போம்

தேடி இன்னும் தமிழகத்தில் கண்டெடுப்போம்

ஈடில்லா கீழடிபோல் ஆயிரம் கீழடியே

மதுரை ந.சுந்தரம் பாண்டி
********************
கீழடி அறிக்கையைக்
           காலடியில் போடாதே.
     (தலைம்ப்பில் கவிதை).

&&&&&&&&&&&&&&&&&&&&

ஓரடி எடுத்து 
      வைத்த ஆய்வஃது

மூவடி இறைமகன்
       காட்டிய மெய்யது

கீழடி தொல்லியல்
        ஆய்வறிக் கய்யே

காலடியில் போடாது
         கண்கொண்டு பாரேன்!

&&&&!

இயற்கை வழிபாடு 
       இன்பியல் வாழ்வை

உயர்த்திப் பிடித்தோர்
       உவந்த வாழ்ந்தனர்

தயக்கம் காட்டாமல்
       தாங்கிடுதல் நன்றன்றோ

மயக்கம் விடுவீர் 
       மடிமேல் அமர்த்திடுவீர்.

&&&&&&&&

கேளடி தோழி
       கீழ்மையின் செயலை! 

ஆளப் பிறந்த
       அழகுத் தமிழனை

ஏளனம் செய்யும்
         இழிவுச் செயலை

வேளை வருமோர்
           நாளில் வெல்வாய்!

&&&&&&

உருவம் நாமம்
       ஒன்றுமே இல்லையே

பருவம் வந்தால் 
        பொழியும் மழைநீர்

தருக்கள் ஓங்கும்
          தண்ணீரைத் தருமே

அருவம் அஃதன்றோ
           அறிவீர் நடுஅரசே!

&&&&&&

கவிபாரதி என்.எஸ்.விஸ்வநாதன்.
***********

*கீழடி👇 அறிக்கையைக்* 
 *காலடியில் போடாதே* !
   📚📚📚 📖 📚📚📚

 *ஓரடி* நடந்தால்
 *ஒரு*👣 *வழிப்பாதை!* -பல
 *பேரடி* நடந்தால் 
 *பொது 👣👣👣👣 வழிப்பாதை!* 

 *தேரடி* நடந்தால் 
 *திரு* 👌
 *வழிப்பாதை* !* 

 *ஈரடி* நடந்தால்
 குறள் வழி
 *பெரு* 🙏
 *வழிப்பாதை!*(4)

நாமும் வாழ 
நாடும் வாழ  
 *நாலடியார்* கூறும்
 *நல்வழிப்✌️ பாதை*(6) 

நாமும் அறிய 
நாடும் அறிய
 *கீழடி* ஆய்வு  அறிக்கை தமிழர் 
 *வரலாற்றுப் பேழை*🧱  (8)

பஞ்சைப் போட்டு நெருப்பை மறைப்பவன் 😇
 *பைத்தியமடா!* 
நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன்
நிச்சயம் 🐾
*மிருகமடா!(10)* 

எத்தனை காலம்தான்
 **ஏமாற்றுவார்* ! -இந்த 
இந்திய நாட்டிலே!
புத்தனைப் போல சித்தனைப் போல  பேசுவார்- 🗣️-தமிழ்
 *ஊற்றுக் கண்ணை*
 ஒளித்து🤩
 *மறைப்பார்* ! -தமிழ் 
 *நாற்று*  
 *மண்ணைப்* பழித்துக்🤗
 *குறைப்பார்* !(14)


 *கீழடி* கொண்டு பூவுலகு வாழ்
 **தமிழ்* 
 *பெருமை**
            👍 
 **தமிழர்* 
 *பெருமை** 
         👍👍
தான் உயரும் என்றால் - *நீர்க்* 💧 
குமிழி போல் மறைத்திடுவார் *-காற்று* 🎼
வழி ஊடகத்தில் *மாற்றி* 
 *உரைப்பார்* 
பழி நம்மீது
 **சாற்றி* 
 *குறை(ரை)ப்பார்* 
(20)

 *கீழடி👇 அறிக்கையைக்* 
 *காலடியில் போடாதே!* -அது
வாழும் தமிழரின் *அடிச்சுவடு*👣 ! -தமிழ் 
ஆளும் மொழியின் *முடிக்கயிறு*📿 ! 
 *காலம் பதில்* *சொல்லும்* !
(24)
✍️
சித்தாந்த ரத்தினம் 
 *எஸ் வி ஆர் மூர்த்தி* 
பெங்களூர் 
 *26.07.2025*

******************
கீழடி அறிக்கையைக் காலடியில் போடாதே !
புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன் 

முற்காலத்தில் மனிதனால் உருவான பொருட்கள் 
தற்காலத்தில் தொல்பொருளாய் மாறிய  தருணங்கள் 
சூழல் மாற்றங்களுக்குப் பலியான நிலப்பகுதிகள் 
சரித்திர நிகழ்வுகளை ஆவணமாக்கும் காரணிகள் 

பண்டைய மனித வாழ்க்கையின் தடங்கள் 
புதையல்களின் பெயரில் வெளிவரும் தகவல்கள் 
தொன்மை காலத்தில் வரலாற்று நிகழ்வுகள் 
தோன்றிய நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சி 

சிவகங்கை மாவட்டத்தில் ஆச்சரியமான  சம்பவம் 
சிந்துவெளி நாகரிகத்திற்கு ஒட்டிய ஆதாரங்கள் 
நிலம் உழும்போது தட்டுப்பட்ட சாமான்கள் 
உலகத்தையே உற்றுநோக்க வைத்தக் கீழடி 

கீழடி அகழாய்வில் காணப்பட்ட  அடையாளங்கள் 
கி.மு500க்கும் கி.மு600க்கும் இடையான  காலமாம் 
வைகை ஆற்றங்கரையில் வளர்ந்த நாகரிகம் 
வரலாற்றைப் புரட்டிப்போட்டப் பல்வேறு தொல்லெச்சங்கள் 

பத்தாண்டுகளாய் நடக்கும் அகழாய்வுப் பணிகள் 
பண்டையத் தமிழர் நாகரிகத்தின் வளர்ச்சிப்பாதை 
உள்ளதை உள்ளபடியேயுள்ளக் கீழடி அறிக்கையினை 
உலகிற்கு உரக்கச்சொல்லுவதில் ஏன் தயக்கம்? 
*****************

கீழடி அறிக்கையை காலடியில் போடாதே! கீழடிக்காக தமிழர்களைப் போராடத் தூண்டாதே! ••••
style="clear: both;">

No comments:

Post a Comment