Tuesday, January 20, 2026

28.12.2025 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம்- 41- தேமதுரத் தமிழோசை உலகெங்கிலும் பரவ வேண்டும்

 



28.12.2025 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம்- 41


மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.

" தேமதுரத் தமிழோசை  உலகெங்கிலும்  பரவ வேண்டும் "  எனும்  தலைப்பில்  கவியரங்கம் நடந்தது.

 தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

 துணைத் தலைவர் முனைவர் இரா  வரதராஜன்  தலைமையில் கவியரங்கம் நடந்தது. வீர அதிசிவத் தென்னவன் முன்னிலை வகித்தார் .பொருளாளர் கவிஞர் இரா . கல்யாணசுந்தரம் வரவேற்றார் .

துணைத் தலைவர் முனைவர் இரா  வரதராஜன்  தலைமையில் கவிஞர்கள் ,இரா.  கல்யாணசுந்தரம் ,  புலவர் மகா .முருகுபாரதி , கி .கோ .குறளடியான் , ச. லிங்கம்மாள்,அஞ்சூரியா செயராமன் ,அ.அழகையா,  பா .பழனி,மா,முனியாண்டி , முனைவர் பா .ஸ்ரீவித்யா பாரதி ,வேல்பாண்டி ஆகியோர் கவிதை பாடினார்கள்.

பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் பழனி ,வேல்பாண்டி  இருவருக்கும் பொன்னாடைப் போர்த்தி தமிழறிஞர் அழகுராசன் வழங்கிய திருக்குறள் முனுசாமி எழுதிய திருக்குறள் உரை நூல் பரிசாக வழங்கி கவிமாமணி தென்னவன் நினைவு  விருதும் வழங்கினார்கள் . 

சென்றமாதம் நூல் வெளியிட்ட கவிஞர்கள்  அஞ்சூரியா செயராமன் ,முனைவர் ஸ்ரீ வித்யா ,பழனி ஆகியோருக்கு பொன்னாடைப் போர்த்தி பாராட்டினார்கள். புலவர் மகா .முருகுபாரதி  நன்றி கூறினார்.

பார்வையாளராக கணேசப்பாண்டியன்  உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
  
 கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .

 படங்கள் புகைப்படக் கலைஞர் ,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .

********





தேமதுரத் தமிழோசை உலகெங்கிலும் பரவ வேண்டும்!

 -    கவிஞர் இரா. இரவி

*****

 தேமதுரத் தமிழோசை உலகெங்கிலும் பரவிட

தமிழர்கள் யாவரும் முயற்சிகள் மேற்கொள்வோம்

 

தமிழின் வளமை பெருமை உலகம் அறிந்திட

தமிழிலிருந்து உலகமொழியான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல்

 

மகாகவி பாரதியின் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தால்

மகாகவிக்கு நோபல் பரிசு கிட்டியிருக்கும் உண்மை

 

இருமொழி அறிஞர்கள் தமிழரில் பலர் உண்டு

இருமொழியில் மொழிபெயர்த்தல் வேண்டும்

 

ஆங்கில இலக்கியம் யாவும் தமிழில் வர வேண்டும்

தமிழ் இலக்கியம் யாவும் ஆங்கிலமாக வேண்டும்

 

உலகப் பொதுமறையான திருக்குறள் மொழிபெயர்த்ததால்

உலகப் பொதுமறையாக உயர்ந்து வென்றது

 

பிற இலக்கியங்களையும் ஆங்கிலமாக்கிட வேண்டும்

பிறர், தமிழின் மேன்மையை அறிந்திட வேண்டும்

 

உலகில் முதல்மொழி தமிழ் என்பதை உலகறிந்தது

உலகிற்கு தமிழின் தொன்மையை உணர்த்த வேண்டும்

 

குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரமும்

குவலயம் உணர்ந்திட ஆங்கிலமாக்க வேண்டும்

 

அவ்வையின் ஆத்திசூடி ஆங்கிலமாகி விட்டது

அந்நியர் படித்து அறிந்து வருகின்றனர்

 

தொல்காப்பியமும் ஆங்கிலத்தில் வரவேண்டும்

தொல்குடி தமிழ்குடி உலகறிய வேண்டும்

 

உலகம் முழுவதும் தமிழ் பரவிட வேண்டும்

உலகம் முழுவதும் தமிழ சிறந்திட வேண்டும்.

 

*************

 

















தேமதுர தமிழோசை உலகெங்கிலும் பரவ வேண்டும் 
புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன்  

முத்தமிழுக்கு நிகர்  எந்தமொழியும் இல்லை
முச்சங்கம் மாதிரி எங்கேயும் நடந்ததில்லை
அகிலத்தில் காணும் தீந்தமிழின் படைப்புகள்
அநேக மொழிகளில் செய்த மொழிபெயர்ப்புகள்

தமிழுக்குக் கிடைத்த செம்மொழித் திலகம் 
தமிழர்களுக்குக் கிடைத்த அசையாத திடம்
எங்கெங்கும் தமிழோசை ஒலிக்கச் செய்வோம் 
எக்காலமும் தமிழுக்காக உழைத்தே மகிழ்வோம் 

இடைஞ்சல் இல்லாமல் பரவியத் தமிழ்மொழி 
இடையில் வந்த ஆங்கிலேயர்களின் ஆங்கிலம்
தேமதுரத் தமிழுக்குக் கலங்கம் விளைவித்தது
தமிழர்களின் வாழ்வியலை ஒடுக்க நினைத்தது 

கணித்தமிழால் மீண்டும் மறுபிறவி எடுத்துள்ளது
கலைகள் படைப்புகள் கணினியில் வளர்கிறது
பாரதியின் தமிழ் பரவுகின்றக் கனவானது 
பலவழிகளில் தமிழர்கள் நாம் சாதிப்போம்

எளிமையாய்த் தமிழைக் கற்றிடச் செய்வோம்
எத்திசையிலும் தமிழை பாயச் செய்வோம் 
வாழ்க்கையில் தமிழைப் பாலமாய் அமைத்திடுவோம்
வளரும் தமிழை தளராமல் தடுப்போம்..

************** 



























******************************

No comments:

Post a Comment