.

வீரபாண்டியதென்னவனுக்கோர்வாழ்த்துப்பா (1)
** அந்தநாள்ஞாபகம்வந்தது **
அந்தநாள்ஞாபகம்அடுக்கடுக்காய்வருகிறது
ஆசானின்பெருமையின்றுபுரிகிறது/
இந்தநாள்தென்னவர்இங்கிருந்தால்நாமெல்லாம்
எல்லையற்றமகிழ்வினில்பறந்திடுவோம்/
உந்தும்சிந்தனையில்உரக்கப்பாடியவர்
ஊரறிந்தகவிப்புலமைநாடியவர்/
சொந்தம்கொண்டாடியேசுற்றத்தைக்காத்தவர்
சோர்விலாசேவையில்நம்மூத்தவர்.//
கவிவித்தகர்பொற்கையார்கனிந்திங்கேவந்துள்ளார்
காணத்தான்முடியவில்லைதென்னவரை/
செவிமடுக்கஇத்தருணம்தென்னவரின்செந்தாமரை
சேர்ந்தேவந்துள்ளார்எங்குசென்றீர்?
குவியும்வாழ்த்துகளைக்கொடிகட்டிப்பறக்கவிட
கோபுரமாய்வந்துள்ளார்நும்குமாரர்/ (ஆதிசிவன்)
தவிக்கும்எமக்கின்றுதந்திடுவீர்உம்வருகை
தாயவள்பிள்ளைகளாய்ஏங்குகிறோம்.//
கருங்கல்கிகண்ணனாரும்கவிபாடவந்துள்ளார்
காந்தசக்திவேந்தரைக்காணவில்லை/
குருவாகஎமக்கெல்லாம்கோலோச்சிநின்றீர்
கோபம்தான்என்னகண்டீர்எம்மில்?
மெருகோடுபலதலைப்பில்மெட்டெடுத்துப்பாடவைத்தீர்
மேணிகலங்குதையாஉமைநினைந்து/
சருகாகிப்போனாலும்சாதனைவேந்தராக
சாகரத்தில்பயணிக்கும்தோணியானீர்/
********
தலைநிமிர வைக்கும் நம் தமிழ்!
- கவிஞர் இரா. இரவி
உலகமே போற்றுகின்றது நம் தமிழ்!
உலகமே வழிமொழிகின்றது மூத்தமொழி தமிழ்!
பகைவர்களும் பாராட்டிடும் மொழி தமிழ்!
பண்பாட்டைப் பயிற்றுவிக்கும் மொழி தமிழ்!
உலகம் தோன்றியபோதே தோன்றியது தமிழ்!
உலகம் வியந்து பார்க்கும் சிறப்புமிகு தமிழ்!
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா!
நாமக்கல் கவிஞரின் வரிகளுக்கு உயிர் வந்ததடா!
உலகமொழிகளின் தாய்மொழி நம் தமிழ்!
உலகமொழிகளுக்கு சொற்கள் தந்தது நம் தமிழ்!
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய
மூத்தமொழி முதல்மொழி நம் தமிழ்!
உலகில் முதல்மனிதன் உரைத்திட்ட மொழி நம் தமிழ்!
உலகில் மொழி ஆய்வாளர்கள் ஏற்றிட்ட மொழி நம் தமிழ்!
இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் நம் தமிழ்!
எண்ணிலடங்கா சொற்களைப் பெற்ற மொழி நம் தமிழ்!
தொல்காப்பியத்திற்கு முன்பே இலக்கியங்கள் உள்ள தமிழ்!
தோன்றின் புகழோடு தோன்றிய மொழி நம் தமிழ்!
ஒப்பற்ற திருக்குறள் எழுதப்பட்ட மொழி நம் தமிழ்!
ஓங்கிய சங்க இலக்கியங்கள் உள்ள மொழி நம் தமிழ்!
பன்னாட்டு மொழியாக கோலோச்சி வருவது நம் தமிழ்!
பன்னாட்டு அறிஞர்கள் போற்றிப்புகழும் நம் தமிழ்!
எல்லாவளமும் நிறைத்திட்ட மொழி நம் தமிழ்!
எல்லா மொழிகளின் தாய்மொழியே நம் தமிழ்!
••••••
*தலை நிமிர வைக்கும் நம் தமிழ்*
தமிழ்வழிக் கற்போம்
தலைநிமிர்ந்தே நிற்போம்
அமிழ்தமெனத் தமிழிருக்க அயலாரின் மொழியேன்
பிறமொழி வழிக்கற்றல் பெருமையென பீற்றுவதேன்
உறவாக மகாலட்சுமி உடனிருக்க ஒட்டாத
ஆட்டின் தாடியாய் அந்நிய
இந்தியேன்
ஊட்டச் சத்தாய் உலகமுதல் மொழிதமிழே
அரசிபோல மனையாள் அன்புடன் இல்லத்திலே
பரத்தைபோல பிறமொழியைப் பாழ்மனது தேடுவதேன்
மண்தோன்றும் காலத்தின்
முன்தோன்றிய மூத்தமொழி
வண்தமிழின் அறிவியல் வானியல் ஆன்மீகமே
உலகெல்லாம் பரப்பிடுவோம் ஒப்பில்லா உயிர்மொழியே
தலைமையேற்கும் பண்புடைய தாய்மொழியோ அறிவியலே
மனிதன் வாழ்வின் மாண்பினைப் பேணியே
இனிதாய் வாழும் இயல்பைச் சொன்னமொழியே
அயலார் மொழிக் கெல்லாம் அன்னைநம் தமிழ்மொழியே
சங்கம் வைத்து சதிராடிய சாகசமே
மங்காத புகழோடு மண்ணாளப் பிறந்தமொழியே
ஐந்நிலம் ஐந்திணை என்பதெல்லாம் வாழும்வகை
பைந்தமிழ் நாட்டியே பண்பாக வளர்ந்தமொழியே
வீரியமாய்த் தமிழிங்கே வீற்றிருக்க வேற்றுமொழி
ஆரியமாய் அழித்திடும் அவலங்கள் நமக்கெதற்கு
ஏனையோர் பேசும்முன்னே எழுத்திலக்கணம்
வடித்தமொழி
பாநயம் பகர்ந்திட்டே பாரில்தலை நிமிர்ந்தமொழி
நலமாய் நாம்வாழ நம்தமிழொன்றேதான்வழி
தலைநிமிர வைக்கும்நம் தமிழ்மொழி
வாழிவாழியே!
மதுரை ந. சுந்தரம் பாண்டி
7200018958
===================
மதுரை ந. சுந்தரம் பாண்டி
7200018958
***********
சங்ககால சுவடுகளில் சரித்திரம் பொறித்த தமிழே
அகிலத்தின் அங்கமெல்லாம் அன்பை தெறித்த தமிழே
ஆளத்துடிக்கும் அண்ணிய மொழியின் ஆணவம் அகற்றி தலை நிமிர் தமிழே
இருளை விலக்கும் ஒளியாய்
தமிழ் இலக்கியம் வழிகாட்டிட
புதிய கவிதைகள் பிறந்திட
நம் மொழியின் நறுமணம் உலகெங்கும் பரவட்டும்
தமிழால் தலைமை நிமிர்வோம் தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்துவோம்
ஆறு கோடி மக்களின் தாய்மொழி அறுசுவையை மிஞ்சும் வாய்மொழி
அகரத்தில் தொடங்கி அகிலத்தை ஆளும் ஆற்றல் மொழி
காலங்கள் கடந்து வாழ்ந்திடும் பழமை மொழி
இயற்கையோடு இணைந்து உறவாடிய முதல் மொழி
உலகம் வியக்கும் நற்றமிழ் மொழி ஞானம் போற்றும் செந்தமிழ் மொழி
கம்பன் பாட்டில் காதல் மழை வள்ளுவர் வாக்கில் வாழ்வியல்
பாரதி பாடிய பாரதத் தாயின் மொழிஎழுத்துக்கள் ஒவ்வொன்றும் எரியும் தீப்பிழம்பு
சொற்கள் ஒவ்வொன்றும் சுரங்கத்தின் மணிவார்த்தைகள் ஒன்றும் வானவில் வண்ணம்
பன்னிரு பாட்டியல் தொல்காப்பியம் தந்து
பழமைக்கு புதுமை சேர்த்த பெரும் மொழி
அகம் புறமாய் இரு பக்கம் நின்று
அன்பையும் வீரத்தையும் அள்ளித்தரும் மொழி
உலக மொழிகளில் உயர்ந்து நிற்கும் உன்னத தமிழ் கொண்டு
தலை நிமிர்வோம் தரணியை ஆள்வோம்
கி.காயத்ரி
மதுரை.
********








**தலை நிமிர*** **வைக்கும் நம்* *தமிழ்** 
*(முதற் கவிதை)*








தமிழன் என்று *சொல்லடா* !- நீ
தலை *நிமிர்ந்து* *_நில்லடா!_*
தன்மானம்
*உயர் வென்று* *சொல்லடா* !நம்
தமிழ்மானம் *உயிரென்று* *நில்லடா!*
(4)
புள்ளி ,பிறை சுழி கோடு என நீளும் *தமிழ் அகரம்!* - மையப்
புள்ளியில் இயங்கும் புவி உலகம் - தமிழ்ப்
பள்ளி இயக்கும் *மொழிப் புல(வ)னம்*
(10)
ஒரு புள்ளியில் தொடங்கியது *தமிழ்த் தலையாகும்*
வரும் பிறையில் அடங்கியது
*தமிழ் உடலாகும்*
தரும் சுழியில் சுழல்வது
*தமிழ் உயிராகும்*
பெருங் கோடென நீள்வது
*தமிழ் அகரமாகும்*
(14)
பழமைக்குப் பழமை
பழம் பெருமை *பட்டயமாகும்*
புதுமைக்குப் புதுமை
புதுப் பெருமை *புத்தெழிலாகும்*
வளமைக்கு வளமை வற்றாத
வளர் வளமை *சத்தாகும்!*
இளமைக்கு இளமை குன்றாத
தளிர் இளமை **சொத்தாகும்* !
(18)
சொல்லும் முத்தமிழ்
*முக்கனியின்* தீஞ்சுவையோ?
வல்லினத் தமிழ் *பலாக் கனியோ!*
மெல்லினத் தமிழ் *வாழைக்கனியோ*
இடையினத் தமிழ் *மாங் கனியோ* !(22)
ஆயிரம் சொல் நா போதாது-நம்
ஆருயிர்த் தமிழ் *முடியை வாழ்த்த!*
ஆயிரம் செய் கை போதாது - நம்
அன்னைத் தமிழ் *அடியை வணங்க!(* 24)

சித்தாந்த ரத்தினம்
*எஸ் வி ஆர் மூர்த்தி* பெங்களூர்
*26.04.2026*








*தலை நிமிர* *வைக்கும் நம் தமிழ்* -
(இரண்டாம் கவிதை)








கோலக் கணக்கில்
*முதற் புள்ளி!* தொடக்கம்!-தமிழ்க்
காலம் கணித்திடக் கணினியோ முடங்கும் !
*அருகு* புல் போல்
கிளைத்த தமிழ் *வேர்*
*ஆல* மரம் போல்
தழைத்த தமிழ் *விழுது*
(4)
ஆதியில் தொலைந்த *அகத்தியம்* முதலாகும்
அடுத்து நிலைத்தது
*தொல்* *காப்பியமாகும்* - *சம*
நீதியில் நின்று
நெறியினில் சென்று
போதித்தது *திருக்குறளாம்*
சாதித்தது *சிலம்பாம்*
(8)
மூவினத்தின் *முகவரியோ!*
முத்தமிழின் *புகழுரையோ!*
முக்கனிகள்
*முதற்* சுவையோ!
எக்கனிக்கும் ஈடாகா
*கன்னலடிச்* *சர்க்கரையோ* !
இனம் மூன்று என்றாலும் மூன்றும்
இணைந்தோடி என்றும்
*வாழும் தமிழ்!*
(12)
ஆவினம் கூவிடும் குரலோசை
தமிழ்ப்
*பாலமுதம்* !
பூவினம் மேவிடும் வண்டோசை
தமிழ்த் *தேனமுதம்* !
தாவிடும் கிளிகள் கூட்டோசை
தமிழ்க் *கனியமுதம்* !
ஓடிடும் நீரோடை பாட்டோசை
தமிழ் *நீரமுதம்* !
(16)
முச்சங்கம் வளர்த்தது முன்னவன் *தென்னவன்* *பாண்டியன்* -நம்
*மா மதுரை* தமிழ்ச்சங்கம்
கண்டது ஐயா *ஆசுகவி*
*வீரபாண்டித்* *தென்னவன்* 
(20)
உலகம் சுற்றி வரும் *தமிழ்*
உலகோர் கற்று வரும் *தமிழ்* - சங்கப் பலகை *மாமதுரைக்* கவியரங்கம்
உலகக்
கவியரங்காய்
*ஓங்கி உயர்க!* 
(24)

சித்தாந்த ரத்தினம்
*எஸ் வி ஆர் மூர்த்தி*
பெங்களூர்
26.04.2026








தலை நிமிர வைக்கும் நம் தமிழ்
தமிழே தமிழே என் உயிர் மூச்சு எட்டுத்திக்கும் பரவும் என் தமிழே
என் குருதியில் ஓடும் தமிழே நான் தாய்ப்பால் பருகும் போது தமிழ்ப்பால் பருகி விட்டேன்
கருவிலே நான் கற்ற மொழி என் தமிழ் மொழி நான் கற்ற மொழிக்கு ஆசிரியரோ இல்லை
என் அன்னை தான் அன்னையின் சுவாசத்தில் கலந்த தமிழ் மொழி
என் சுவாசத்தில் கலந்து விட்டதே நான் செல்லும் இடமெல்லாம்
என் தமிழால் உயர்வு பெற்றேன் இன்று தமிழால் தலை நிமிர்ந்து நிற்கின்றேன்
என் தமிழ் மொழி தலை நிமிர வைக்கும் மொழியாம்
கவிஞர். நா. சூரிய பிரேமா பி. ஏ. மதுரை
பட்டி மன்ற பேச்சாளர், தன்னபிக்கை பேச்சாளர்.
******
தலைநிமிர வைக்கும் தமிழ்
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
தமிழ்மொழியேத் தாய் தமிழர்களே மக்கள்
தமிழ் உயர்ந்தால் தமிழரும் உயர்வார்
தமிழ் நிமிர்ந்தால் தமிழரும் நிமிர்வார்
தமிழே வாழ்ந்தால் தமிழரும் வாழ்வார்.
உடலுக்கு அழகு நிமிர்ந்த தலை
உயிருக்கு அழகு நிமிர்ந்த தமிழ்
நீரோட்ட அழகு நில்லாது ஓடுவது
நித்தமும் அழகு தமிழை ஓதுவது
தமிழ்மொழி மலரானால் முகரத் தடையேது?
தமிழ் காந்தமானால் கவர்வதில் தடுப்பேது?
தமிழ் வெளிச்சமானால் அறிவில் இருளேது?
தமிழ் நவீனமானால் கற்பதில் தவறேது?
எம்மொழிக்கும் விலை போகாது தமிழ்
எம்மொழிக்கும் அடிமை ஆகாது தமிழ்
எம்மொழிக்கும் அஞ்சாது வாழும் தமிழ்
எம்மொழிக்கும் அநீதி இழைக்காது தமிழ்
கொடியல்லத் தமிழ் கொம்புள்ள விருட்சம்
கொடை குணமுள்ள வள்ளல் தமிழ்மொழி
தனித்து இயங்கும் தெம்புள்ள தமிழ்மொழி
தன்னிகரில்லா தமிழை தலைநிமிரச் செய்வோம்.
*******






















































































































































































































No comments:
Post a Comment