26.5.19 தமிழகமே தமிழ் மறந்தால் - கவியரங்கம் -
மாமதுரைக் கவிஞர் பேரவை
அன்று கவிஞர்கள் வாசித்த கவிதைகள் இதோ...
தமிழகமே தமிழ்மறந்தால்
தமிழ்மொழியை யார்படிப்பார்?
*****************************
செம்மை வாய்ந்த செல்ல மொழியே!
அன்பைக் கொடுக்கும் அமுத மொழியே!
தாய்மை வாய்ந்த என் தாய் தமிழே!
உன்னுடைய இனிமை இல்லை வேறு மொழியில்!
நேற்றைய தினம் தோன்றி
இன்றைய தினம் வலம் வருகிற மொழி
செம்மை மொழியா?
ஆதியிலே தோன்றி
அன்பைத் தருவது
செம்மை மொழியா?
தமிழ் இனமே மறவாதே
உன்னுடைய தாய்த் தமிழை!
பிற மொழியை பேசினால்
அது உன்னை உயர்த்தாது தமிழா!
தமிழ் மொழியே உன்னை
உயர்த்தி விடும் தமிழா!
தமிழை நீ என்றும் மறவாதே தமிழா!
பிள்ளைதனை அன்னை மறந்தால்
தலைமகளை யார்மதிப்பார்?
தமிழகமே தமிழ்மறந்தால்
தமிழ்மொழியை யார்படிப்பார்?
கவிஞர்.வ.வரதராஜன்,
மதுரை.
அலைபேசி : 8220574435
மின்னஞ்சல்: varathu2806@gmail. com
********************************************************************************************
தமிழகமே தமிழ்மறந்தால்
தமிழ்மொழியை யார்படிப்பார்?
புதுக்கவிதை
மழையை வானம் மறந்தால்
மண்ணின் வளம் என்னாவது?
கதிரவன் ஒளிவீச மறந்தால்
கண்ணான வாழ்வு என்னாவது?
எழுத்துகளை மொழி மறந்தால்
இயற்றிய நூல்கள் என்னாவது?
தமிழ்பேசத் தமிழன் மறந்தால்
தமிழகப் பெருமை என்னாவது?
பசி மயக்கம் தணியலாம்
பண மயக்கம் தணியுமா?
தமிழ் மயக்கம் தணியலாம்
ஆங்கில மயக்கம் தணியுமா?
எறும்பு ஊரஊரக் கல்லும் தேயுமாம்
ஆங்கிலம் பேசப்பேச தமிழும் தேயுமே
அகவை ஏறஏற உயிருடம்பு மாயும்
அந்நியச்சொல் சேரசேர தமிழும் மாயும்.
புதைந்து போனத் தனித்தமிழுக்குப்
புத்துயிர் ஊட்ட தமிழகம் தயங்குது
தமிழன் மூளையில் பதிந்த ஆங்கிலத்தைத்
துடைத்திடத் தமிழன் மனம் மறுக்குது.
******************
விழா - மின்படத் தொகுப்பு
மின்பட உதவி - இரா.இரவி & கார்த்திகேயன் - நன்றி
நன்றி
படங்களின் அணிவகுப்பில், விழா நிகழ்வுகளை நேரில் கண்ட உணர்வு
ReplyDeleteசிறப்பு.தமிழ்த்தொண்டை தொடருங்கள்.பாராட்டுக்கள்
ReplyDelete