திருக்குறளோர் வழிநூலா?
தற்குறியே பழிக்காதே!
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
மதுரை 9865642333
வாழ்க்கை விதியினை இயம்புவதில் உறுதி
வினையும் பயனும் அமைந்துள்ள நியதி
முக்காலத்திற்கும் ஒளி வீசும் பரிதி
முப்பாலுள்ள திருக்குறள் நூலே வாரிதி.
அறிஞர்களுக்கும் நா தடுமாறுமாம் கை
கிறுக்குமாம்
அவ்வழியில் ஓர் அறிஞரின் பிதற்றல் நூலாம்
திருக்குறளோர் வேதவழியில் வந்த நூலாம்
தமிழர்களைத் தமிழனே புதைக்கும் படுகுழியாம்.
குறுக்குவழியில் புகழ் சேர்க்க
விரும்புவோர்
கும்பிடும் குலக்கடவுளைக் குறை கூறுவார்
வழிவந்த நூல்களைத் திரி(ரு)த்தி
எழுதுவார்
வரலாறையே மாற்றி எழுதவும் தயங்கார்.
காக்கை குயில் பேதம் முட்டையிலே தெரியுமா?
கரையும் கூவும் ஒலியாலே இனம் காணலாமே
வாழ்வில் திணிக்கப்பட்ட நூல்களே
வேதங்களாகுமே
வாழ்வினைக் கணிக்கப்பட்ட நூலே
திருக்குறளாமே.
தமிழர்களுக்குத் தலையாய்த் திருக்குறள்
தாங்கும்
தரணியில் மொழிகளுக்குச் சிகரமாய் நிற்கும்
திருக்குறள் விருட்சத்தில் இருந்து வீழ்த்த
வித்தே
தாய்த்திருநாட்டில் வேதங்களின் வடிவாய்
விரிந்ததே!
*******************
நன்றி
No comments:
Post a Comment