25.8.19 எழுச்சிக் கவியரங்கம் -
பிறமொழியைக் கலக்காதே தம்பி !
மாமதுரை கவிஞர் பேரவை -
தொகுப்பு
பிறமொழியைக் கலக்காதேதம்பிதம்பி
பிழைபட்டுத் தமிழ்தவிக்கும் வெம்பிவெம்பி
கவிமாமணிபேராசிரியர் மு.க.பரமசிவம்
பேரையூர் மதுரைமாவட்டம்
1. அழகுதமிழ் நம்முடையசொந்தம் தம்பி
ஆர்வமுடன் பேசவேண்டும் தம்பிதம்பி
பழகுதமிழ் மொழிதனைப் படிப்பாய் தம்பி
பார்போற்றஅதைநீயேபேசுதம்பி
வழங்குகின்றசொற்களிலேகலக்கலாமா
வேறுமொழிஆங்கிலத்தைநுழைக்கலாமா
பழித்துலகம் துப்பிடநீபேசலாமா
பிழைபட்டநடையள்ளிவீசலாமா
2. உறவுதனைச் சிதைக்கலாமாதம்பிதம்பி
உமதுதமிழ் வழக்கழியும் வெம்பிவெம்பி
பிறமொழியைப் படிப்பதிலேதப்பே இல்லை
பைந்தமிழுழ் அதைக்கலத்தல் தொல்லைதொல்லை
சிறந்திங்கேபிறந்ததமிழ் அழியலாமா
செம்மொழியின் தனித்தன்மைசிதையலாமா
வேற்றெழுத்தைஅழைக்காதேதம்பிதம்பி
வில்லங்கம் ஆகாதேதம்பிதம்பி
3. அரிதானதமிழ் மொழியைக் காப்பாய் தம்பி
அதற்காகத் தினமும்நீஉழைப்பாய் தம்பி
பெரிதானதாய் மொழியைச் சிதைக்கலாமா
பிழைபட்டுத் தமிழ்தவிக்கவிதைக்கலாமா
சரியாகநீநின்றால் தம்பிதம்பி
சகலருமேதமிழ்ப்படிப்பார் எம்பிஎம்பி
வரலாறைப் படைப்பதற்கேவந்தநீயே
வெறுங்கோடுஆகலாமாவெந்துதேய்ந்தே.
************
கவியரங்கம்
தலைப்பு
பிறமொழியைக் கலக்காதே தம்பி தம்பி
பிழைபட்டுத் தமிழ்த்தவிக்கும் வெம்பி
வெம்பி
நிறைகுடமான நல்லத் தமிழில்
கறைபடிந்தது கலப்புத் தமிழாலே
தங்கத்தமிழைத் கொள்வார் இல்லை
தங்கமுலாம் தமிழை அணிகிறாயே !
பிறசொல் தமிழில் கலப்பு
பின்னாளில் தமிழே இழப்பு
ஆங்கிலம் கலப்பது தப்பு
அதுவே தமிழின் தவிப்பு
பண்பாடு மாற்றம் ஏற்றோம்
கலாச்சார மாற்றம் ஏற்றோம்
நாகரீக மாற்றம் ஏற்றோம்
தமிழில் மாற்றம் ஏற்கணுமா?
பலவண்ண வானவில் அழகு
பிறமொழியுள்ள தமிழ் அழகா?
சேற்றில் செந்தாமரை அழகு
செந்தமிழில் கலப்பு அழகா?
காலில் ஏறிய பிறசொற்கள்
குரல்வளையை கவ்வி நிற்கிறது
கூக்குரல் காதில் ஒலிக்கவில்லை
கூப்பாடு போட்டும் பயனில்லை
ஓட்டுநர் இல்லாத வண்டி
ஒழுங்காய் ஊரு சேருமா?
ஆங்கிலம் நுழைந்த தமிழ்
திமிங்கிலமாய் மாறி விழுங்கிடுமா?
படைப்பு : கு.கி.கங்காதரன், மதுரை
***************
போட்டியில் வென்று விழாவில் கலந்துகொண்டு தங்கள் கவிதைகளைப் பாடிய அத்தனை கவிஞர்களுக்கும் சான்றிதழ், புத்தகம் மற்றும் கோப்பை வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.
தேனீர் விருந்தும் மற்றும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
விழாவினை சிறப்பித்த அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விழாவின் மின்படத் தொகுப்பு
*********************