Friday, December 9, 2022

27.11.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் - தலைப்பு - உலகின் முதன்மொழி தமிழே!

                                27.11.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் - 

தலைப்பு  - உலகின் முதன்மொழி தமிழே!

27.11.2022 மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம். படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா .இரவி வரவேற்றார். தலைவர் பேராசிரியர் சக்திவேல் கவியரங்கிற்கு தலைமை வகித்தார். புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் சிறப்புரையாற்றினார். "உலகின் முதல் மொழி தமிழே!" தலைப்பில் கவிஞர்கள் முருகுபாரதிகுறளடியான்இதயத்துல்லாஅஞ்சூரியா க.செயராமன்ஜெய் சங்கர்முனைவர் இரா.வரதராசன்சங்கர நாராயணன்ச.லிங்கம்மாள்கு.ப.நாகராசன்பொன்பாண்டிஇராம பாண்டியன்அ.அழகையாகு.கி.கங்காதரன்மா.வீரபாகுஇரா.கல்யாணசுந்தரம்சாந்தி திருநாவுக்கரசுஇரா.இரவி ஆகியோர் கவிதை படித்தனர். சாந்தி திருநாவுக்கரசு அவர்களின் புதிய நூல் வெளியிடப்பட்டது. வருகை தந்த அனைவருக்கும் நன்கொடையாக   நூலை வழங்கினார் நூல் ஆசிரியர்.





















                  உலகின் முதன்மொழி தமிழே!
                                புதுக்கவிதை 
                             கு.கி.கங்காதரன் 

மொழிக்கு வேண்டியது ஒலி  
ஒலியை மாற்றுவது எழுத்து 
எழுத்துகளின் பெருமை எளிமை
எளிமைக்கு ஐயமின்றி தமிழே..

பறவைகள் எழுப்புகின்ற ஒலிகள் 
விலங்குகள் கத்துகின்ற ஒலிகள் 
உணர்வுகளில் உருவாகும் ஒலிகள் 
அனைத்தும் சொற்களானது தமிழில்.

இயற்கையின் ஒலிகளுள்ள மொழி 
இயல்பாய் ஒலிக்கும் இன்மொழி 
வளமான சொற்களுள்ள செம்மொழி 
பன்மொழிகளுக்கு  வள்ளலான தமிழ்

தமிழ் மொழி தோன்றியது எப்போது?
தொன்மையென தொல்லியல் சொல்கிறது
தோண்டத் தோண்ட வயது நீளுகிறது
தக்கவிடை காட்டாமல் விளையாடுது 

முத்தமிழ் காலத்தைக் கணக்கிட்டாலும்
இயலிசை நாடகத்தை ஆராய்ந்தாலும்
இலக்கண இலக்கியங்களைப் படித்தாலும்
மொழிகளில் முதன்மையானது தமிழே..

********************************************

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Tuesday, November 8, 2022

30.10.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் 4 - தலைப்பு : கற்பனையும் கவிதையும்

 

30.10.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் 4 - கற்பனையும் கவிதையும் 



மதுரை, மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 அளவில்  நடந்த கவியரங்கம். 

பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலர் கவிஞர் இரா.இரவி முன்னிலை வகித்தார்.

கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு அவர்களின் "பார்வைத் தீண்டல்கள்"நூல் வெளியிடப்பபட்டது.

புரட்சிக்கவிஞர் அறத்தின் தலைவர் பி .வரதராசன் வாழ்த்துரை வழங்கினார். கற்பனையும் கவிதையும் என்ற தலைப்பில் கவிஞர்கள் இரா இரவிமுனைவர் இரா.வரதராசன்கு.கி.கங்காதரன்கல்யாண சுந்தரம்சங்கர நாராயணன்அஞ்சூரியா க.செயராமன்மா.வீரபாகுபொன் பாண்டிஇராம.பாண்டியன்ச.லிங்கம்ம்மாள்சாந்தி திருநாவுக்கரசுகுறளடியான்புலவர் முருகுபாரதிபால கிருட்டிணன்சசி முத்துஅனுராதா, பால் பேரின்பநாதன்  ஆகியோர் கவிதை வாசித்தனர். 

படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் சம்பத் கை வண்ணம்.ஏற்பாடு இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன். 30.10.2022

















       கற்பனையும் கவிதையும்
                 புதுக்கவிதை
             கு.கி.கங்காதரன்

நிகழ்வுகள் நினைவுகளாகத் தங்கும்
நினைவுகள் எண்ணங்களாக மாற்றும்
எண்ணங்கள் கற்பனைகளாக மலரும்
கற்பனைகள் கவிதைகளாகப் பிறக்கும்

கற்பனைகள் செய்திடாத மனிதன்
கானங்கள் கேட்டிடாதச் செவிகள்
சிலைகள் வடித்திடாதப் பாறைகள்
மாலைகள் தொடுத்திடாதப் பூக்கள்

எளிமையாய் எடுத்துரைப்பது கவிதை
ஏக்கங்களைத் தீர்ப்பது கவிதை
காதல்நோய்கு மருந்தாவது கவிதை
கேட்போரை வீரமூட்டுவது கவிதை

அரசனை ஆண்டியாக்கும் கற்பனை
ஆண்டியை அரசனாக்கும் கற்பனை
நிலவினைக் கரங்களில் காட்டும் 
உலகினைப் பையில் போட்டிடும்

இருப்பதை இல்லாமல் செய்யும்
இல்லாததை இருப்பதாகச் சொல்லும்
உண்மையை பொய்யென உரைக்கும்
பொய்யை உண்மையென சாதிக்கும்

கற்பனை... கவிஞர்களை உருவாக்கும் 
கற்பனை... விஞ்ஞானிகளைக் கொடுக்கும்
கற்பனை... புதுமைகளுக்கு வித்திடும்
கற்பனை... படைப்பாளர்களைத் தந்திடும்

*******************************************

*******************