Monday, August 1, 2022

24.7.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை, மதுரை கவியரங்கம் - முயன்றால் முடியும்!

  முயன்றால் முடியும்!

24.7.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை, மதுரை கவியரங்கம் 



    மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில்மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடந்த கவியரங்கம். படங்கள் இனியநண்பர்கள் புகைப்படக் கலைஞர்கள் மோகன்ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மாமதுரைக் கவிஞர் பேரவையின் நிறுவனர் அமரர் சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களுக்கு மாலையிட்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.



   மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். புரவலர் பி.வரதராசன் சிறப்புரையாற்றினார். பேரவையின் தலைவர் பாவலர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. 

    முயன்றால் முடியும் என்ற தலைப்பில் கவிஞர்கள் கவிதை வாசித்தனர் .துணைச்செயலர் கு.கி. கங்காதரன்பொருளாளர் இரா. கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார். பேரவையின் தலைவர். பாவலர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் இரா.இரவிகு.கி.கங்காதரன்இரா.கல்யாணசுந்தரம்குறளடியான்,  மு.க.பரமசிவம், இஸ்மத்பால கிருட்டிணன்கவிக்குயில் இரா. கணேசன்லிங்கம்மாள்பா.வீரபாகுக.செயராமன்கு.பால் பேரின்ப நாதன்சாந்தி திருநாவுக்கரசுமதுரகவி க.சரத்குமார்சங்கர நாராயணன்நாகேந்திரன்இரவி சந்திரன்உள்ளிட்ட கவிஞர்கள் கவிதை பாடினார்கள். மாமதுரைக் கவிஞர் பேரவையின் நிறுவனர் அமரர் சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் மகன் திரு .ஆதி சிவம் நன்றி கூறினார்.

 



































 













முயன்றால் முடியும்!

புதுக்கவிதை

கு.கி.கங்காதரன் 

 

மனிதா பிறப்பது ஒருமுறை

மானுடம் காப்பது நெறிமுறை

முடியாது என்பார் மூடர்கள்

முடியும் என்பார் அறிவாளிகள்

 

வெற்றிக்குத் தேவை முயற்சி

வேண்டும் அதற்குப் பயிற்சி

தோல்வி என்பது தொடக்கம்

துணிந்தால் கிடைக்கும் பதக்கம்

 

விழுந்தே கிடந்தால் வீழ்ச்சி 

எழுந்து நடந்தால் எழுச்சி  

முயற்சி செய்தால் வளர்ச்சி 

முடிந்தால் வாழ்வில் மகிழ்ச்சி

 

முயற்சி நம்பிக்கை அளிக்கும்
நம்பிக்கை திறமையை வளர்க்கும்
திறமை துணிவைத் தரும்
துணிவு வெற்றியைக் காட்டும்

 

கவலைகளைத் துடைத்திடும் முயற்சி
கட்டாந்தரையைப் பசுமையாக்கும் முயற்சி
தீமைகளை நன்மையாக்கும் முயற்சி

தோல்விகளை வெற்றியாக்கும் முயற்சி

 ********************************